Published : 21 May 2021 03:14 AM
Last Updated : 21 May 2021 03:14 AM

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள - கிராமப்புறங்களில் கரோனா விழிப்புணர்வு ஏற்படுத்த 770 காவலர்கள் நியமனம் : காவல் கண்காணிப்பாளர் டாக்டர் விஜயகுமார் தகவல்

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ளகிராமங்களில் கரோனா விழிப் புணர்வு ஏற்படுத்த 770 காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் கரோனா தொற்றின் பாதிப்பு 17 ஆயிரத்தை கடந்துள்ளது. 3,748 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டம் முழுவதும் 600-க்கும் மேற்பட்ட இடங்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.

கிராமப்பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் வியாபாரம், தொழில்நிமித்தமாக நகர் புறங்களுக்கு வந்து செல்வதால் கரோனா தொற்றுக்கு ஆளாகி வருவதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர். எனவே, கிராமப்பகுதிகளில் கரோனா குறித்த விழிப்புணர்வும், கிராம மக்களுக்கு தடுப்பூசி போட்டுக்கொள்ளுவதற்கான விழிப்புணர்வும் ஏற்படுத்த வேண்டும் என சுகாதாரத்துறை அறிவுறுத் தியுள்ளது. இதைத்தொடர்ந்து, மாவட்ட காவல் துறை சார்பில் கிராம மக்களுக்கு கரோனா தொற்று மற்றும் தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இது குறித்து செய்தியாளர் களிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் விஜயகுமார் கூறும்போது, ‘‘திருப்பத்தூர் மாவட்டத்தில் முழு ஊரடங்கு கடுமையாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. மாவட்டம் முழுவதும் 820 காவலர்கள் சுழற்சி முறையில் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், கொத்தூர், தகரகுப்பம், பாரதி நகர், கொல்லப்பள்ளி ஆகிய 4 இடங்களில் மாநில சோதனைச் சாவடி அமைக்கப்பட்டுள்ளன.

அதேபோல, சின்னகந்திலி, தோரணம்பதி, பேராம்பட்டு, சுந்தரம்பள்ளி, வெலக்கல்நத்தம், மாதனூர், தீர்த்தம், உமராபாத், ஓணாங்குட்டை, காவலூர் ஆகிய இடங்களில் மாவட்ட எல்லைக்கான சோதனைச்சாவடி அமைக்கப்பட்டு அங்கு 3 ஷிப்ட் அடிப்படையில் சுமார் 96 காவலர்கள் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 4 அரசு மருத்துவமனைகள், 25 தற்காலிக கரோனா சிகிச்சை மையங்களில் 174 காவலர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அரசின் வழிகாட்டு நெறிமுறை களை பின்பற்றாமல் அதிக அளவிலான ஆட்களை திரட்டி வியாபாரம் செய்த 96 கடைகளுக்கு காவல் துறை மூலம் ‘சீல்' வைக்கப்பட்டு கடை உரிமையாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப் பட்டுள்ளது.

கிராமப்புறங்களில் கரோனா பரவல் அதிகமாக காணப்படுவதால் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள தாய் கிராமங்கள், குக்கிராமங்கள் என மொத்தம் 770 கிராமங்களுக்கு கரோனா கரோனா தொற்று மற்றும் தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த காவலர்கள் பணியமர்த்தப்பட் டுள்ளனர்.

இதற்காக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ‘கிராம விழிக்கண் குழு மையம்’ அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையம் கிராம காவலர்களுடன் தொடர்பு கொண்டு அந்த கிராம மக்களுக்கு தடுப்பூசி செலுத்திக்கொள்ளவும், கரோனா குறித்த விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகின்றனர்’’. என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x