Published : 21 May 2021 03:14 AM
Last Updated : 21 May 2021 03:14 AM

தனிமைப்படுத்தப்பட்ட கரோனா நோயாளிகளுக்கு - தொண்டு நிறுவனம் சார்பில் இலவச உணவு வழங்க ஏற்பாடு :

திருப்பத்தூர் அடுத்த நரியநேரியில் உள்ள கரோனா சிறப்பு சிகிச்சை மையத்தில் தனிமைப்படுத்தப்பட்ட நோயாளிகளுக்கு உணவுகளை வழங்கிய சேஞ்ச் நிறுவன இயக்குநர் சரஸ்வதி.

திருப்பத்தூர்

கரோனா சிறப்பு சிகிச்சை மையங் களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள கரோனா நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்களுக்கு ‘சேஞ்ச் தொண்டு நிறுவனம்’ மூலம் இலவச உணவு வழங்கப்பட்டு வருகிறது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 4 அரசு மருத்துவமனைகள் மற்றும் கரோனா சிறப்பு சிகிச்சை மையங்களில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், கரோனா சிறப்பு சிகிச்சை மையங்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள கரோனா நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்களுக்கு ‘சேஞ்ச் தொண்டு நிறுவனம்’ சார்பில் இலவசமாக உணவு வழங்கப்பட்டு வருகிறது.

கடந்த 15-ம் தேதி முதல் தொடர்ச்சியாக தனிமைப்படுத்தப் பட்டுள்ள கரோனா நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்களுக்கு காலை நேரங்களில் பிரட் மற்றும் பால், மதிய நேரத்தில் உணவு பொட்டலங்கள் வழங்கப்படுகின்றன. திருப்பத்தூர் அடுத்த நரியநேரி பகுதியில் உள்ள கலைக்கல்லூரியில் அமைக்கப் பட்டுள்ள கரோனா சிறப்பு சிகிச்சை மையத்தில் தனிமைப்படுத்தப் பட்டுள்ள கரோனா நோயாளிகள் கிராமப்பகுதிகளைச் சேர்ந்த வசதியற்ற தொழிலாளிகள் என்பதால் இலவச உணவுகளை சேஞ்ச் தொண்டு நிறுவனம் சார்பில் வழங்கப்பட்டு வருவதாக அதன் இயக்குநர் சரஸ்வதி தெரிவித்தார். இதற்கான ஏற்பாடுகளை சேஞ்ச் தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் பழனிவேல்சாமி செய்திருந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x