Published : 19 May 2021 03:12 AM
Last Updated : 19 May 2021 03:12 AM

நீலகிரி மாவட்டத்துக்குள் இ-பதிவு இன்றி - காலை 10 மணிக்கு மேல் சுற்றித்திரிந்தால் கிரிமினல் வழக்கு : ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா எச்சரிக்கை

உதகை

கரோனா தொற்று வேகமாக பரவி வருவதால், நேற்று (மே 18) முதல் நீலகிரி மாவட்டத்துக்குள்ளும் காலை 10 மணிக்குமேல் ஓரிடத்தில் இருந்து மற்றோர் இடத்துக்குச்செல்ல இ-பதிவு கட்டாயம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. நேற்று காலைமுதல் மாவட்டம்முழுவதும் காவல் துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து நீலகிரி மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா கூறியதாவது: நீலகிரி மாவட்டம் கூடலூரில் 200 படுக்கைகளுடன் கூடிய கரோனா சிகிச்சை மையம் நாளை (இன்று) திறக்கப்படும். 100ஆக்சிஜன் சிலிண்டர்கள் கூடுதலாகஉள்ளன. நீலகிரி மாவட்டத்துக்குள் காலை 10 மணிக்குமேல் தேவையில்லாமல் பொதுமக்கள் சுற்றுவதைத்தடுக்க இ-பதிவு கட்டாயம் எனஅறிவிக்கப்பட்டுள்ளது. இ-பதிவு இன்றி சுற்றித்திரிவோர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்படுவதுடன், வாகனங்களும் பறிமுதல் செய்யப்படும். தேயிலை,மலைக்காய்கறிகள் உட்பட அத்தியாவசியப் பொருட்கள் எடுத்துச்செல்ல இ-பதிவு தேவையில்லை. இவ்வாறு அவர் கூறினார். மாவட்டத்தில் உள்ள அனைத்து சோதனைச்சாவடிகளிலும் காவல் ஆய்வாளர்கள் தலைமையில், காவல்துறையினர் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

1,199 பேர் மீது வழக்கு

நீலகிரி மாவட்டத்தில் கடந்த 10-ம் தேதி முதல் நேற்று (மே 18) வரை ஊரடங்கு விதிகளை மீறியதாக 1,199 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் முகக்கவசம் அணியாத நபர்கள் 680 பேர், சமூக இடைவெளியை கடைபிடிக்காத 79 பேர், தேவையின்றி சுற்றித்திரிந்த 440 பேர் என 1,199 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஊரடங்கு விதியை மீறி, தேவையின்றி வெளியே சுற்றும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனநீலகிரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆர்.பாண்டிய ராஜன் எச்சரித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x