Published : 15 May 2021 03:13 AM
Last Updated : 15 May 2021 03:13 AM
திருநெல்வேலி/ தென்காசி/ தூத்துக்குடி
திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று 645 பேருக்கு கரோனா பாதிப்பு நேற்று புதிதாக கண்டறியப்பட்டது.
இதில் திருநெல்வேலி மாநகர பகுதிகளில் 210 பேருக்கும், அம்பாசமுத்திரம்- 66, சேரன்மகாதேவி- 42, களக்காடு- 30,மானூர்- 37, நாங்குநேரி- 34, பாளையங்கோட்டை- 57, பாப்பாகுடி- 15, ராதாபுரம்- 11 மற்றும் வள்ளியூர்- 143 பேருக்கும் தொற்று உறுதியானது. திருநெல்வேலியில் 3 பேர் உயிரிழந்தனர்.
தென்காசி
தென்காசி மாவட்டத்தில் நேற்று 443பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதன் மூலம் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 15 ஆயிரத்து 534 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 271 பேர் குணமடைந்தனர். இதுவரை 13 ஆயிரத்து 84 பேர் பேர் குணமடைந்துள்ளனர்.தற்போது 2,216 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கரோனாதொற்றால் பாதிக்கப்பட்ட 11 பேர் உயிரிழந்தனர். இதன் மூலம் தென்காசி மாவட்டத்தில் கரோனா தொற்றால் மொத்த உயிரிழப்பு 235 ஆக உயர்ந்துள்ளது.
தூத்துக்குடி
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்றுஒரே நாளில் புதிதாக 885 பேருக்குகரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் பல்வேறு மருத்துவமனைகள் மற்றும் வீடுகளில் தங்கியிருந்து தற்போது 5,074 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று ஒரே நாளில் 4 பேர் உயிரிழந்தனர்.
நாகர்கோவில்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT