Published : 14 May 2021 03:12 AM
Last Updated : 14 May 2021 03:12 AM

மே 16-ம் தேதி முதல் ஆவின் பால் விலை குறைப்பு :

திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்ட ஆவின் பொதுமேலாளர் ராமநாதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: முதல்வர் அறிவிப்புக்கு இணங்க திண்டுக்கல் மாவட்ட பால் கூட்டுறவு உற்பத்தியாளர்கள் ஒன்றியம் சார்பில்லிட்டருக்கு ரூ.3 குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி நிலைப்படுத்திய பால் 500 மி.லி. ரூ.21.50 (பழைய விலை ரூ.23), நிறை கொழுப்பு பால் 500 மி.லி. ரூ.24 (பழைய விலை ரூ.25.50), ஒரு லிட்டர் ரூ. 47 (பழைய விலை ரூ.50) என மே 16-ம் தேதி முதல் விற்பனை செய்யப்பட உள்ளது.

பால் நுகர்வோருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ள பால் அட்டைகளுக்குரிய வித்தியாசத் தொகை அடுத்த மாதம் பால் அட்டைகள் பெறும்போது சரிசெய்யப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x