Published : 13 May 2021 03:12 AM
Last Updated : 13 May 2021 03:12 AM

நெல்லையில் 857 பேருக்கு கரோனா :

திருநெல்வேலி/ தென்காசி/தூத்துக்குடி/ நாகர்கோவில்

திருநெல்வேலி மாவட்டத்தில் 857 பேருக்கு கரோனா பாதிப்பு நேற்று கண்டறியப்பட்டுள்ளது. இதில் திருநெல்வேலி மாநகர பகுதிகளில் மட்டும் 262 பேருக்கு பாதிப்பு உறுதியாகியுள்ளது. வட்டாரம் வாரியாக பாதிப்பு எண்ணிக்கை விவரம்:

அம்பாசமுத்திரம்- 107, சேரன்மகாதேவி- 56, களக்காடு- 15, மானூர்-55, நாங்குநேரி- 50, பாளையங்கோட்டை- 122, பாப்பாகுடி- 6, ராதாபுரம்- 90, வள்ளியூர்- 94. திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று 3 பேர் கரோனாவுக்கு உயிரிழந்தனர்.

தென்காசி மாவட்டத்தில் நேற்று 314 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதன் மூலம் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 14 ஆயிரத்து 717 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 162 பேர் குணமடைந்தனர். இதுவரை 12 ஆயிரத்து 890 பேர் பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 1,836 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கரோன தொற்றால் பாதிக்கப்பட்ட 3 பேர் உயிரிழந்தனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்றுஒரே நாளில் புதிதாக 748 பேருக்குகரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 32,140 ஆக அதிகரித்துள்ளது. நேற்று ஒரே நாளில் 717 பேர்குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 27,016 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 4,951 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று 2 பேர் உயிரிழந்தனர்.

கன்னியாகுமரி

கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று மட்டும் 500-க்கும் மேற்பட்டோருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 8 பேர் மரணமடைந்தனர். தற்போது 3,200 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x