Published : 12 May 2021 03:15 AM
Last Updated : 12 May 2021 03:15 AM

நெல்லை உட்பட 4 மாவட்டங்களில் 2,265 பேருக்கு கரோனா :

திருநெல்வேலி/தென்காசி/ தூத்துக்குடி/நாகர்கோவில்

திருநெல்வேலி மாவட்டத்தில் மட்டும் 705 பேருக்கு புதிதாக தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இதில், திருநெல்வேலி மாநகர பகுதிகளில் 279 பேருக்கு பாதிப்பு உறுதியாகியுள்ளது.

வட்டாரம் வாரியாக பாதிப்பு எண்ணிக்கை விவரம்:அம்பாசமுத்திரம்- 12, சேரன்மகாதேவி- 34, களக்காடு- 28, மானூர்- 64, நாங்குநேரி- 41, பாளையங்கோட்டை- 87, பாப்பாகுடி- 22, ராதாபுரம்- 9, வள்ளியூர்- 129.

தென்காசி

தென்காசி மாவட்டத்தில் 232 பேருக்கு புதிதாக கரோனா பாதிப்பு நேற்று கண்டறியப்பட்டுள்ளது. வட்டாரம் வாரியாக பாதிப்பு எண்ணிக்கை விவரம்: ஆலங்குளம்- 13, கடையம்- 18, கடையநல்லூர்- 20, கீழப்பாவூர்- 29, குருவிகுளம்- 22, மேலநீலிதநல்லூர்- 17, சங்கரன்கோவில்- 37, செங்கோட்டை- 22, தென்காசி- 39, வாசுதேவநல்லூர்- 15.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் புதிதாக 628 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் மாவட்டத்தில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 31,376 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று ஒரே நாளில் 638 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 26,299 பேர்குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 4,906 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று 3 பேர் உயிரிழந்தனர்.

கன்னியாகுமரி

கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று மட்டும் 700-க்கும் மேற்பட்டோர் கரோனாவால் பாதிக்கப்பட்டனர். சிகிச்சை பெற்று வந்த 8 பேர் நேற்று மரணமடைந்தனர்

கரோனாவால் உயிரிழந்த இருவரது உடல்களை மருத்துவமனை ஊழியர்கள் மாற்றி வழங்கி விட்டனர். இதுபற்றி அறியாமல் உறவினர்கள் உடல்களை அடக்கம் செய்த நிலையில், இந்த விவகாரம் தெரிய வந்ததும் பின்னர் மீண்டும் உடல்களை தோண்டி எடுத்து மறு அடக்கம் செய்தனர்.

ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனை பிணவறை முன்பு,கரோனாவால் மரணமடைந்த இருவரது சடலங்கள் தள்ளுவண்டியில் வைக்கப்பட்டிருந்தன. நீண்ட நேரம்அவற்றை யாரும் கண்டு கொள்ளாத நிலையில், மழையில் அவைநனைந்தவாறு கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதற்கிடையே கரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு உயிருக்கு போராடும் தொற்றாளர்களுக்கு உரிய சிகிச்சை வழங்கப்படவில்லை என அவர்களது உறவினர்கள் குற்றம்சாட்டி மருத்துவர்கள், செவிலியர்களிடம் தகராறில் ஈடுபடுகின்றனர்.

இதையடுத்து மருத்துவமனையில் கூடுதல் போலீஸார் குவிக்கப்பட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x