Published : 09 May 2021 03:15 AM
Last Updated : 09 May 2021 03:15 AM
காஞ்சி மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழகத்தில் மீன்வளத்தைப் பாதுகாக்கும் நோக்கத்துடன், தமிழக கடற்கரையில் சுருக்குமடிவலை மற்றும் இரட்டைமடி வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடிக்க தடை செய்யப்பட்டுள்ளது. தடைசெய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன்பிடிப்பில் ஈடுபடும்போது அதிக கடற்பரப்பு மீன்பிடிப்புக்கு உட்படுத்தப்பட்டு பலவகைமீன்கள் அதிக அளவில் பிடிபடுவதுடன் கடலின் அடிப்பகுதியில் உள்ள இயற்கை வளம் பாதிப்படைகிறது.
இதன் காரணமாக, மீன்களின் இனப்பெருக்கம் தடுக்கப்பட்டு, மொத்த மீன் உற்பத்தி பாதிக்கப்படுகிறது. நடப்பு 2021-ஆம் ஆண்டுக்கான மீன்பிடி தடைக்காலத்தை வரும் ஜுன் 14-ம் தேதி வரை (61 நாட்கள்) செயல்படுத்த அரசு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மீனவர்கள் எவரேனும் தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகளைவைத்திருந்தால் சம்பந்தப்பட்ட மீன்வளத் துறை அலுவலகத்தில்ஒப்படைக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். அவ்வாறு ஒப்படைக்கத் தவறும் பட்சத்தில் அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT