Published : 09 May 2021 03:15 AM
Last Updated : 09 May 2021 03:15 AM
அமைச்சரவையில முஸ்லிம் களுக்கு 2 இடங்கள் ஒதுக்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு ராமநாத புரம் மாவட்ட முஸ்லிம் ஐக்கிய ஜமாஅத் நன்றி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட முஸ்லிம் ஐக்கிய ஜமாஅத் பொதுச்செயலாளர் ஏ.ஜெய்னுல் ஆலம், முதல்வர் ஸ்டாலினுக்கு அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:
மிகவும் நெருக்கடியான காலக்கட்டத்தில் முதல்வராகப் பதவியேற்றுள்ள ஸ்டாலினுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம். குறிப்பாக ஆவடி நாசரை பால்வளத் துறை அமைச்சராகவும், செஞ்சி மஸ்தானை சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சராகவும் 2 முஸ்லிம்களை நியமனம் செய்துள்ளதற்கு ராமநாதபுரம் மாவட்ட முஸ்லிம் ஐக்கிய ஜமாஅத்தின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் எனக் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT