Published : 09 May 2021 03:16 AM
Last Updated : 09 May 2021 03:16 AM
திருநெல்வேலி/ தென்காசி/ தூத்துக்குடி / நாகர்கோவில்
திருநெல்வேலி மாவட்டத்தில் 641 பேருக்கு நேற்று புதிதாக கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. இதில் திருநெல்வேலி மாநகர பகுதிகளில் மட்டும் 292 பேருக்கு தொற்று உறுதியானது. வட்டார அளவில் பாதிப்பு எண்ணிக்கை விவரம்: பாளையங்கோட்டை- 78, மானூர்,வள்ளியூர்- தலா 63, அம்பாசமுத்திரம்- 58, சேரன்மகாதேவி- 35, பாப்பாகுடி- 20, ராதாபுரம்- 14,களக்காடு- 11, நாங்குநேரி- 7. திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 3 பேர் உயிரிழந்தனர்.
நாகர்கோவில்
கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 600-க்கும் மேற்பட்டோருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 8 பேர்நேற்று உயிரிழந்தனர். கரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் முகக் கவசம் அணியாத மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றாத 47,680 பேரிடமிருந்து இதுவரை ரூ.94 லட்சத்து 43 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி
தென்காசி
தென்காசி மாவட்டத்தில் நேற்று 120 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டது. நேற்று 214 பேர் குணமடைந்தனர். தற்போது 1,182 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று 5 பேர் உயிரிழந்தனர்.Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT