Published : 08 May 2021 03:15 AM
Last Updated : 08 May 2021 03:15 AM

விழுப்புரம் மாவட்டத்தில் புதிய உச்சமாக - ஒரே நாளில் 521 பேருக்கு கரோனா :

கடலூர்/விழுப்புரம்

கடலூர் மாவட்டத்தில் நேற்று 462 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் 32,662 பேருக்கு தொற்று ஏற்பட்டு, நேற்று 343 பேர் உட்பட 30,107 பேர் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியுள்ளனர்.

தற்போது 1,713 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று 5 பேர் உயிரிழந்தது உட்பட மாவட்டத்தில் இதுவரை 348 பேர் உயிரிழந்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று புதிய உச்சமாக 521 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதன் மூலம் நேற்று வரை 21,703 பேருக்கு தொற்று ஏற்பட்டு, 18,822 பேர்சிகிச்சைக்கு பின் வீடு திரும்பிஉள்ளனர். தற்போது 2,747 பேர்சிகிச்சையில் உள்ளனர். நேற்று2 பேர் உயிரிழந்தது உட்பட இதுவரை 134 பேர் உயிரிழந்துள்ளர்.

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று 202 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் நேற்று வரை 13,547 பேருக்கு தொற்று ஏற்பட்டு, 12,602 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 829 பேர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று ஒருவர் உயிரிழந்தது உட்பட 116 பேர் உயிரிழந்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x