Published : 07 May 2021 03:13 AM
Last Updated : 07 May 2021 03:13 AM

செங்கை, காஞ்சி மருத்துவமனைகளில் ரூ.1.66 கோடியில் - கூடுதலாக 554 ஆக்சிஜன் படுக்கை வசதிகள் :

செங்கல்பட்டு

செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள மருத்துவமனைகளில் ரூ.1.66 கோடியில் 554 ஆக்சிஜன் படுக்கைகள் வசதி அமைக்கப்பட்டு வருகிறது.

சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் கரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் போதிய படுக்கை வசதி இல்லாததால் பொதுமக்கள் செய்வதறியாமல் தவித்து வருகின்றனர்.

மேலும், ஆக்சிஜன் படுக்கை வசதி கொண்ட படுக்கைகள் மருத்துவமனையில் போதிய அளவு இல்லாததால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றனர். இவற்றை நிவர்த்தி செய்ய தமிழக அரசுபல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படிதமிழகம் முழுவதும் 12,370 ஆக்சிஜன் இணைப்புகளுடன் கூடியபடுக்கை வசதியை ஏற்படுத்தஅரசு அறிவுறுத்தியுள்ளது. அதன்அடிப்படையில் பொதுப்பணித் துறையினர் போர்க்கால அடிப்படை பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஏற்கெனவே 480 ஆக்சிஜன் இணைப்புடன் கூடிய படுக்கை வசதிகள் உள்ளன. தற்போது அங்கு கூடுதலாக 200 படுக்கை வசதியை ஏற்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதேபோல் திருப்போரூர், திருக்கழுக்குன்றம், மதுராந்தகம், செய்யூர், மாமல்லபுரம் ஆகிய பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைகளில் 173 ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கை வசதிகள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

காஞ்சிபுரம் மாவட்டத்தில், காஞ்சிபுரம் தலைமை மருத்துவமனை, பெரும்புதூர் அரசு மருத்துவமனை, வாலாஜாபாத் மற்றும் உத்திரமேரூர் அரசு மருத்துவமனைகளில் 181 ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கை வசதிகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதுகுறித்து பொதுப்பணித் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: அரசு அறிவுறுத்தலின் பேரில், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைகளில் சுமார் ரூ. 1 கோடியே 66 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பீட்டில் 554 ஆக்சிஜன் இணைப்புகளுடன் கூடிய படுக்கைவசதிகளை அமைக்க, போர்க்கால அடிப்படையில் பணிகள் நடைபெற்று வருகின்றன.

தினமும், மாவட்டத்திலும் சுகாதாரத் துறை, மாவட்டஆட்சியர் ஆகியோருடன் நாள்தோறும் கலந்து ஆலோசித்து இரண்டாம் அலையை எதிர்கொள்ள மருத்துவத் துறைக்கு தேவையான அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளையும் தீவிரமாகவும் துரிதமாகவும் செய்து வருகிறோம். ஓரிரு வாரங்களில் அனைத்து பணிகளும் முடிவடையும். மேலும் இதேபோல் ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் ஆக்சிஜன் படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்படவுள்ளன என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x