Published : 07 May 2021 03:13 AM
Last Updated : 07 May 2021 03:13 AM

விருதுநகரில் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த : வடமாநில தொழிலாளர்கள் 26 பேருக்கு கரோனா :

அதில் வடமாநில தொழிலாளர்கள் 26 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டது. அதோடு பெண் மருத்துவர் ஒருவர், மருத்துவப் பணியாளர்கள் இருவர் உட்பட நேற்று ஒரே நாளில் விருதுநகர் மாவட்டத்தில் 234 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. பாதிக்கப்பட்ட வடமாநிலத் தொழிலாளர்கள் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் இதுவரை 21,243 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 19,299 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். 1,697 பேர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கரோனா தொற்றால் இதுவரை 250-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x