Published : 06 May 2021 03:13 AM
Last Updated : 06 May 2021 03:13 AM

கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் : கரோனாவால் ஒரே நாளில் 7 பேர் உயிரிழப்பு :

கடலூர்/விழுப்புரம்

கடலூர் மாவட்டத்தில் நேற்று 296 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் 31,831 பேருக்கு தொற்று ஏற்பட்டு, 29,457 பேர் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியுள்ளனர். தற்போது 1,501 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று 4 பேர் உயிரிழந்தது உட்பட இதுவரை 340 பேர் உயிரிழந்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று 412 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 20,688 பேருக்கு தொற்று ஏற்பட்டு, 18,077 பேர் சிகிச்சைக்குப் பின்பு வீடு திரும்பியுள்ளனர். தற்போது 2,481 பேர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று 3 பேர் உயிரிழந்தது உட்பட இதுவரை 130 பேர் உயிரிழந்துள்ளர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று 131 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தற்போது 711 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x