Published : 06 May 2021 03:13 AM
Last Updated : 06 May 2021 03:13 AM

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு வழக்கில் : கூலித் தொழிலாளிக்கு 11 ஆண்டுகள் சிறை :

திண்டுக்கல் அருகே எரமநாயக்கன்பட்டியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி முருகன் (53). மூன்று ஆண்டுகளுக்கு முன்பு 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது தொடர்பாக போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து முருகனை திண்டுக்கல் மகளிர் போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கு திண்டுக்கல் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. முருகனுக்கு 11 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி புருஷோத்தமன் தீர்ப்பளித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x