Published : 06 May 2021 03:14 AM
Last Updated : 06 May 2021 03:14 AM

மின்வாரிய அலுவலகங்கள் இடமாற்றம் :

திருப்பத்தூர்

திருப்பத்தூர் கோட்டத்தில் உள்ள மின்வாரிய அலுவலகங்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளன.

இது குறித்து திருப்பத்தூர் மின்கோட்ட செயற்பொறியாளர் கிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "திருப்பத்தூர் லண்டன் மிஷன் ரோடு, சவுகத் அலி பேட்டையில் இயங்கி வந்த செயற்பொறியாளர் வருவாய் மற்றும் உதவி கணக்கு அலுவலகம் திருப்பத்தூர் அடுத்த வெங்களாபுரத்தில் உள்ள துணை மின்நிலைய வளாகத்துக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல, திருப்பத்தூரில் இயங்கி வந்த உதவி செயற்பொறியாளர், வடக்கு, உதவி பொறியாளர் நகரம் 1, நகரம் 2-க்கான அலுவலகங்கள் திருப்பத்தூர் அடுத்த ஜலகாம்பாறை செல்லும் வழியில் உள்ள கோவிலூர் சாலையில் உள்ள துணை மின்நிலைய வளாகத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. திருப்பத்தூர் டவுன் சிவராஜ் பேட்டை துணை மின்நிலையத்தில் இயங்கி வந்த உதவி பொறியாளர் வடக்கு அலுவலகம், கருப்பனூர் கிராமத்தில் உள்ள கிராம சேவை மைய வளாகத்துக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது’’ என தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
     
    x
    News Hub
    Icon