Published : 01 May 2021 03:16 AM
Last Updated : 01 May 2021 03:16 AM
அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே செம்பியன் மாதேவியின் பிறந்தநாளையொட்டி, அவரது சிலைக்கு சமூக ஆர்வலர்கள் நேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
திருமானூர் ஒன்றியம் கண்டராதித்தம், இலந்தைக்கூடம் வருவாய் எல்லைக்குட்பட்ட பகுதியில் கண்டராதித்த சோழன் தனது மனைவி செம்பியன்மாதேவி பெயரில் 450 ஏக்கர் பரப்பளவில் அமைத்த பெரிய ஏரியில் சேமிக்கப்படும் தண்ணீரால் இலந்தைக்கூடம், வைத்தியநாதபுரம், கண்டராதித்தம், க.மேட்டுத்தெரு, பாளையப்பாடி, அன்னிமங்கலம், அரண்மனைக்குறிச்சி, காரைப்பாக்கம், மஞ்சமேடு, முடிகொண்டான், திருமானூர், திருவெங்கனூர் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள 20 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசனம் பெற்று வருகின்றன. இந்நிலையில், செம்பியன்மாதேவியின் 1,111-வது பிறந்த நாளான நேற்று கண்டராதித்தம் ஏரிக்கரையில் உள்ள கண்டராதித்த சோழன் மற்றும் செம்பியன் மாதேவி சிலைகளுக்கும், செம்பியக்குடி கிராமத்தில் உள்ள செம்பியன்மாதேவி சிலைக்கும் சமூக ஆர்வலர்கள் சந்திரசேகர், பாளை.திருநாவுக்கரசு, பாஸ்கர் உள்ளிட்டோர் மாலை அணிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT