Published : 28 Apr 2021 03:14 AM
Last Updated : 28 Apr 2021 03:14 AM
அனுமதியின்றி குழந்தைகள் பராமரிப்பு இல்லம் வைத்து நடத்தினால் ரூ.1 லட்சம் அபராதத்துடன் ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்படும், என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் கா.மெகராஜ் தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
குழந்தைகளை வைத்து பராமரிக்கும் அனைத்து இல்லங்களும் இளைஞர் நீதிச் சட்டம் 2015 பிரிவு 41-ன்படி பதிவு செய்யப்பட்ட பின்னரே நடத்த வேண்டும்.
அவ்வாறு பதிவு செய்யாமல் சட்டத்திற்கு புறம்பாக குழந்தைகள் இல்லங்கள் நடத்தினால் ரூ.1 லட்சம் அபராதத்துடன் 1 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும்.
இதுதொடர்பாக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, இளங்கோ திருமண மண்டபம் அருகில், மோகனூர் சாலை, நாமக்கல் என்ற முகவரியில் நேரிலோ அல்லது 04286 -233103 என்ற தொலைபேசி எண்ணிலோ புகார் செய்யலாம்.
இதுபோல் 1098 என்ற சைல்டு லைன் இலவச தொலைபேசி எண்ணிலும் தகவல் அளிக்கலாம். தகவல் அளிப்போர் ரகசியம் பாதுகாக்கப்படும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT