பெரம்பலூரில் உலக புத்தக தின கருத்தரங்கு  :

பெரம்பலூரில் உலக புத்தக தின கருத்தரங்கு :

Published on

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் பெரம்பலூர் மாவட்ட கிளை சார்பில், உலக புத்தகத் தின விழா லட்சுமி செவிலியர் கல்லூரி கூட்ட அரங்கில் அண்மையில் கொண்டாடப் பட்டது.

இவ்விழாவுக்கு தலைமை வகித்த தமுஎகச மாவட்டச் செயலாளர் பேராசிரியர் ப.செல்வகுமார், உலக புத்தக தினம் குறித்து பேசினார். மருத்துவர் சி.கருணாகரன் முன்னிலை வகித்தார். வேப்பந்தட்டை அரசு கலைக் கல்லூரி ஆங்கிலத் துறைத் தலைவர் பேராசிரியர் க.மூர்த்தி உலக புத்தக தினம் குறித்து சிறப்புரையாற்றினார். பேராசிரியர் க.குமணன் வாழ்த்திப் பேசினார். செவிலியர் கல்லூரி மாணவி சவுந்தர்யா வரவேற்றார். வே.செந்தில் குமரன் நன்றி கூறினார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in