Published : 25 Apr 2021 06:10 AM
Last Updated : 25 Apr 2021 06:10 AM

கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் - புதிதாக 487 பேருக்கு கரோனா :

கடலூர்/விழுப்புரம்

கடலூர் மாவட்டத்தில் நேற்று 205 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் இதுவரையில் 28,721 பேருக்கு தொற்று ஏற்பட்டு, நேற்று 178 பேர் உட்பட 26,914 பேர் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியுள்ளனர். தற்போது 971 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் இதுவரை 314 பேர் உயிரிழந்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று 205 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் நேற்று வரை 17,277 பேருக்கு தொற்று ஏற்பட்டு, 16,119 பேர் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியுள்ளனர். தற்போது 1,042 பேர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று ஒருவர் உயிரிழந்தது உட்பட இதுவரை 116 பேர் உயிரிழந்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று 77 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட் டுள்ளது.

இதன் மூலம் நேற்று வரை 11,841 பேருக்கு தொற்று ஏற்பட்டு, 11,197 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 536 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 108 பேர் உயிரிழந்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x