Published : 25 Apr 2021 06:10 AM
Last Updated : 25 Apr 2021 06:10 AM
திருநெல்வேலி/ நாகர்கோவில்/ தென்காசி
திருநெல்வேலி மாவட்டத்தில் முதல்முறையாக கரோனா பாதிப்பு500- ஐ தாண்டியிருப்பது சுகாதாரத்துறையினருக்கும், பொதுமக்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
மாவட்டத்தில் 523 பேருக்குநேற்று கரோனா உறுதியாகியிருந்தது. இதில் மாநகர பகுதிகளில் 266 பேருக்கும், புறநகர் பகுதிகளில் 257 பேருக்கும் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. வட்டாரம் வாரியாகபாதிப்பு எண்ணிக்கை விவரம்:
அம்பாசமுத்திரம்- 32, மானூர்-18, நாங்குநேரி- 20, பாளையங்கோட்டை- 68, பாப்பாக்குடி- 5, ராதாபுரம்- 18, வள்ளியூர்- 39, சேரன்மகாதேவி- 15, களக்காடு- 42.
மாவட்டத்தில் தற்போது கரோனா பாதிப்பு எண்ணிக்கை 20,789 ஆக உள்ளது. 3,368 பேர்மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 227 பேர் கரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த ஆண்டு கரோனா முதல் அலையின்போது ஒரு நாள் பாதிப்பு எண்ணிக்கை உச்சபட்சமாக 400-ஐ தாண்டவில்லை.
இந்நிலையில் தற்போதைய 2-வது அலையில் கடந்த ஒரு வாரமாகவே பாதிப்பு எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் உயர்ந்து 400-ஐ கடந்திருந்தது. இந்நிலையில் புதிய உச்சமாக நேற்று ஒரே நாளில் 523 பேருக்கு பாதிப்பு உறுதியாகியிருக்கிறது.
தென்காசி
தென்காசி மாவட்டத்தில் இதுவரை 2 லட்சத்து 29 ஆயிரத்து 495 கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. நேற்று 1,150 பரிசோதனைகள் செய்யப்பட்டதில் 160 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால், மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10,638 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 170 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 9,221 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 1,259 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 2 பேர் உயிரிழந்தனர். இதனால், மாவட்டத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 171 ஆக உயர்ந்துள்ளது.இதற்கிடையே, கரோனா பரவலை கட்டுப்படுத்த பொது இடங்களில் முகக்கவசம் அணியாமல் இருப்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. நேற்று 402 பேரிடம் இருந்து 80 ஆயிரத்து 400 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. இதுவரை 53 லட்சத்து 90 ஆயிரம்ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டு, அரசு கருவூலத்தில் செலுத்தப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி
கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று 212 பேருக்கு தொற்றுகண்டறியப்பட்டது. 46 வயதுபெண் உட்பட 3 பேர் மரணமடைந்துள்ளனர். மாவட்டம் முழுவதும்இதுவரை 19,500 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனா மரணம் 367ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 5,18,839 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது 1,141 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் மட்டும் 351 பேர் சிகிச்சை பெறுகின்றனர்.முகக்கவசம் அணியாதது, சமூக இடைவெளியை பின்பற்றாதது தொடர்பாக மாவட்டம் முழுவதும் இதுவரை 40 ஆயிரம் பேருக்குரூ.76.23 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. காய்ச்சல், சளி அறிகுறிகள் இருந்தும், மருத்துவமனைக்கு செல்லாமல் சுய மருத்துவம் எடுத்துக்கொள்வதும், மூச்சுத் திணறல் வந்த பின்னர் மருத்துவமனைக்கு வருவதுமே மரணங்கள் ஏற்பட காரணம் என மருத்துவர்கள் தெரி விக்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT