Published : 25 Apr 2021 06:10 AM
Last Updated : 25 Apr 2021 06:10 AM

திருவண்ணாமலை மாவட்டத்தில் மே 2-ம் தேதி - வாக்கு எண்ணும் மையங்களுக்கு வருபவர்கள் : கரோனா பரிசோதனை செய்திருக்க வேண்டும் : தமிழக தேர்தல் ஆணையம் உத்தரவு

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டத்தில் வரும் மே 2-ம் தேதி அன்று வாக்கு எண்ணும் மையங் களுக்கு வருபவர்கள், கரோனா பரிசோதனை கட்டாயம் செய்திருக்க வேண்டும் என அறி விக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை, செய்யாறு, வந்தவாசி, போளூர், கலசப்பாக்கம், ஆரணி, கீழ்பென்னாத்தூர் மற்றும் செங்கம் என மாவட்டத்தில் 8 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளில் கடந்த 6-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்குப்பதிவு முடிந்ததும், மின்னணு வாக்கு இயந்திரங்கள் மற்றும் யாருக்கு வாக்களிக்கப்பட்டது என தெரிந்து கொள்ளும் விவிபாட் இயந்திரம் ஆகியவைகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது. இதையடுத்து, வாக்கு எண்ணும் மையங்களுக்கு இயந்திரங்கள் கொண்டு செல்லப் பட்டன.

திருவண்ணாமலை, செங்கம், கலசப்பாக்கம் மற்றும் கீழ்பென் னாத்தூர் தொகுதிகளில் பதிவான வாக்குகள் திருவண்ணாமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்திலும், ஆரணி, போளூர், செய்யாறு மற்றும் வந்தவாசி தொகுதிகளில் பதிவான வாக்குகள் ஆரணி அடுத்த தச்சூர் கிராமத்தில் உள்ள அண்ணா பொறியியல் கல்லூரியிலும் மே மாதம் 2-ம் தேதி எண்ணப்படவுள்ளன. வாக்குகள் எண்ணும் பணி காலை 8 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப் பட்டுள்ளது.

இந்நிலையில் கரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ளதால், வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு நடவடிக்கையை மேற்கொள்ள, அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக தேர்தல் ஆணையம் அறிவுரை வழங்கியுள்ளது. அதன்படி, திருவண்ணா மலை மாவட்டத்தில் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடவுள்ள அதிகாரிகள், அலுவலர்கள், ஊடகத் துறையினர் மற்றும் அரசியல் கட்சிகளின் முகவர் களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப் படவுள்ளன. முதற்கட்டமாக, அனைவருக்கும் கரோனா பரிசோதனை கட்டாயம் என ஆய்வு கூட்டங்களில் அறிவிக்கப்பட்டு வருகிறது.

வாக்கு எண்ணும் மையங் களுக்கு வருபவர்கள், கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டாலும் 72 மணி நேரத்துக்கு முன்பாக கரோனா பரிசோதனை செய்து கொண்டு, அதற்கான சான்றுகளுடன் வர உத்தரவு பிறப்பிக் கப்பட்டு வருகிறது. அந்தந்த மாவட்டங்களில் நிலவும் சூழலுக்கு ஏற்ப முடிவுகளை எடுத்துக் கொள்ளலாம் என ஆட்சியர்களுக்கு தமிழக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளால், கரோனா பரிசோதனை கட்டாய மாகிறது.

மேலும், வாக்கு எண்ணும் மையங்களுக்கு வருபவர்கள் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. கரோனா நெறிமுறைகளை பின்பற்றி 8 தொகுதி களுக்கான வாக்கு எண்ணும் அறையில் சமூக இடைவெளியை பின்பற்றி மேஜைகளை அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x