Published : 23 Apr 2021 03:15 AM
Last Updated : 23 Apr 2021 03:15 AM
சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் அடிப்படையில் கம்பம் தெற்கு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு தேனி மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை முடிந்த நிலையில் நீதிபதி வெங்கடேசன் தீர்ப்பளித்தார்.
இதில் குற்றவாளி நாச்சிமுத்துக்கு 5 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும், இதனை செலுத்தத் தவறினால் மேலும் 1 ஆண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பளிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மாநில அரசு இழப்பீட்டு தொகையாக ரூ.1 லட்சம் வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT