Published : 23 Apr 2021 03:15 AM
Last Updated : 23 Apr 2021 03:15 AM

திருச்செங்கோடு வாக்கு எண்ணும் மைய கண்காணிப்பு அறையில் ஆட்சியர் ஆய்வு :

திருச்செங்கோடு விவேகானந்தா கல்லூரியில் உள்ள வாக்கு எண்ணும் மைய கண்காணிப்பு அறையில் மாவட்ட ஆட்சியர் கா.மெகராஜ் ஆய்வு செய்தார்.

நாமக்கல்

திருச்செங்கோடு வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள கண்காணிப்பு அறையில் பதிவாகும் காட்சிகளை நாமக்கல் மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

திருச்செங்கோடு விவே கானந்தா மகளிர் தொழில்நுட்பக் கல்லூரியில் நாமக்கல் மாவட்டத்திற்கு உட்பட்ட 6 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்ட அறைக்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மேலும், ஒவ்வொரு தொகுதிக்கும் உறுதியான பாதுகாப்பு அறைக்கு எதிரே வீடியோ கேமரா பொருத்தப்பட்டு நிகழ்வுகள் கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணிக்கப்படுகிறது. இவற்றை வேட்பாளர்கள் மற்றும் அவர்களது முகவர்களும் கண்காணித்து வருகின்றனர்.

இதனை நேற்று நாமக்கல் மாவட்ட ஆட்சியர் கா.மெகராஜ் கண்காணிப்பு அறையில் பதிவாகும காட்சிகளை ஆய்வு செய்தார். ஆய்வின்போது தேர்தல் பரிவு அதிகாரிகள் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x