Published : 20 Apr 2021 03:15 AM
Last Updated : 20 Apr 2021 03:15 AM
கரூர் மாவட்டத்தில் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, 7 அரசு மருத்துவமனைகள், 37 ஆரம்ப சுகாதார நிலையங்கள், அனுமதி பெற்ற 6 தனியார் மருத்துவ மனைகளில் கரோனா தடுப்பூசி போடப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த 16-ம் தேதியுடன் தடுப்பூசிகள் தீர்ந்துவிட்டதால், ஏப்.17, 18 ஆகிய இரு நாட்கள் மாவட்டத்தில் எங்கும் கரோனா தடுப்பூசி போடப்படவில்லை. இதனால், 2-ம் கட்ட தடுப்பூசி போடவேண்டியவர்கள், புதிதாக கரோனா தடுப்பூசி போட விரும்பி யவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
இந்நிலையில், கரூர் மாவட்டத்துக்கு 500 கோவேக்ஸின் தடுப்பூசிகள் நேற்று முன்தினம் வந்தன. இதையடுத்து, கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா 2-ம் கட்ட தடுப்பூசி போடவேண்டியவர்களுக்கு நேற்று கோவேக்ஸின் தடுப்பூசி போடப்பட்டது. குளித்தலை அரசு மருத்துவமனையிலும் தடுப்பூசி போடப்பட்டது. கோவிட்ஷீல்டு தடுப்பூசி வராததால், குளித்தலை நீங்கலான 6 அரசு மருத்துவமனைகள், கரூர் கஸ்தூரிபாய் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளிட் 37 ஆரம்ப சுகாதார நிலையங்களில் நேற்றும் தடுப்பூசி போடப்படவில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT