Published : 19 Apr 2021 03:16 AM
Last Updated : 19 Apr 2021 03:16 AM
ஜக்கி வாசுதேவின் ஈஷா மையத்தை தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும் என தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் மணியரசன் தெரிவித்தார்.
தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் நேற்று சிதம்பரத்தில் நடைபெற்றது. தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் மணியரசன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் வெங்கட்ராமன் முன்னிலை வகித்தார். தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் மணியரசனை தாக்க திட்டமிடும் நபர்களை கைது செய்ய வேண்டும். இந்து அறநிலையத்துறையைக் கலைத்திடக் கோரும் ஜக்கி வாசுதேவின் கோரிக்கையை மறுத்து தமிழக அரசு அறிக்கை வெளியிட வலியுறுத்தியும் மே 8-ம் தேதி தஞ்சையில் தெய்வத் தமிழ்ப் பேரவை சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடத்துவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பின்னர் தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் மணியரசன் செய்தியாளர்களிடம் கூறியது:
வெள்ளியங்கிரி பகுதியில் கட்டப்பட்டுள்ள ஈஷா மையத்தைஅரசு கையகப்படுத்த வேண் டும். ஜக்கி வாசுதேவ் ஆதர வாளர்களுக்கு கோயிலுக்குள் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதிஅளித்தது தவறான முன்னுதா ரணமாகும். இதற்கு மூலகார ணமாக விளங்கும் ஜக்கி வாசுதேவ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஜக்கி வாசுதேவின் கோரிக் கையை அரசு மறுத்து அறிக்கை வெளியிட வேண்டும். தமிழ்நாடு கோயில்களில் தமிழ்வழியில் பூஜையும் குடமுழுக்கும் நடத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மே 8-ம் தேதி தஞ்சையில் தெய்வத் தமிழ்ப் பேரவை சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது என்று தெரிவித்தார்.
ஜக்கி வாசுதேவின் கோரிக்கையை அரசு மறுத்து அறிக்கை வெளியிட வேண்டும். தமிழ்நாடு கோயில்களில் தமிழ்வழியில் பூஜையும் குடமுழுக்கும் நடத்த வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT