Published : 16 Apr 2021 03:13 AM
Last Updated : 16 Apr 2021 03:13 AM
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும், என இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் தெரிவித்தார்.
நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலுக்கு வந்த இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இந்து சமய அறநிலையத்துறைக்கு என தனி ஆணையம் உருவாக்க வேண்டும். அதற்கென தேர்தல் வைத்து நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பது எங்களது நீண்ட நாள் கோரிக்கையாகும்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கப்போவது உறுதி. முதல்வர் பழனிசாமி இரண்டாவது முறையாக முதல்வராக பொறுப்பேற்பார் என்ற நம்பிக்கை உள்ளது.
கோயில்கள் பக்தர்கள் வசம் செல்ல வேண்டும் என்ற பிரச்சாரத்தை சத்குரு தொடங்கி உள்ளார். அதை இந்து மக்கள் கட்சி ஆதரிக்கிறது. நாங்களும் இதற்கு உறுதுணையாக இருப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT