Published : 16 Apr 2021 03:13 AM
Last Updated : 16 Apr 2021 03:13 AM
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட தமிழாசிரியர்கள் சார்பில் பிளஸ் 2 மாணவர்களுக்கான உரிமைத் தாகம் என்ற சிறுகதையை குறும்படமாக தயாரித்து வெளியிட் டுள்ளனர்.
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட முதுகலை தமிழாசிரி யர்களைக் கொண்ட 'அன்புத் தமிழ் நெஞ்சம்' என்கிற யூ-டியூப் சேனல் பள்ளி மாணவர் களுக்காக பல்வேறு தமிழ்ப்பாட காணொலிகளை உருவாக்கி வெளியிட்டு வருகிறது. கரோனா ஊரடங்கு காலத்தில் பள்ளிகள் மூடப்பட்ட சூழலில் இந்த ஆசிரி யர்கள் மாணவர்கள் நலனில் அக்கறை கொண்டு வகுப்பறை கற்றல் பாதிப்புக்குள்ளான வேளையில் பாடங்களைக் காணொலி வடிவில் அனைத்து மாணவர்களும் கற்கும் வகையில் வழிசெய்து வருகின்றனர்.
அந்த வகையில், பிளஸ் 2 மாணவர்களுக்கு தமிழ்ப்பாடத்தில் இடம்பெற்றுள்ள எழுத்தாளர் பூமணியின் ‘உரிமைத் தாகம்’ எனும் சிறுகதையைக் குறும்படமாக தயாரித்து வெளியிட்டுள்ளனர். இதற்கான நிகழ்ச்சி மேல்விஷாரம் அப்துல் ஹக்கீம் கல்லுரியில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில், எழுத்தாளர் அழகிய பெரியவன் பங்கேற்று குறும்பட தகட்டை வெளியிட்டார்.
நிகழ்ச்சியில் அழகிய பெரியவன் பேசும்போது, “காட்சி ஊடகங் களில் தமிழாசிரியர்கள் என்றால் நகைப்புக்குரிய மரியாதையற்ற பாத்திரமாகவே சித்தரிக்கின்றனர். ஆனால், வேலூர் மாவட்ட தமிழாசிரியர்களின் ஆத்மார்த்தமான அர்ப்பணிப்பு உணர்வு அவற்றைப் பொய்யாக்குகிறது. இக்குறும்படத்தை அவர்களே இயக்கி, நடித்து, பாடல் எழுதி, பாடி, ஒளிப்பதிவும் செய்து வெளியிடுவது உண்மையில் மனமகிழ்வைத் தருகிறது. இவர்களின் சாதனைப் பயணம் இன்னும் பல உச்சம் தொட வாழ்த்துகிறேன்” என்றார்.
இந்த நிகழ்ச்சியில், ஆற்காடு வட்டாட்சியர் காமாட்சி நடராஜன், ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் வேதையா ஆகியோர் பங் கேற்று வாழ்த்திப் பேசினர். குறும்படத்தின் இயக்குநர் பார்த்திபன், பாடலாசிரியர் சீனி.தனஞ்செழியன் மற்றும் முகமது காசிம், இராச.தனஞ்செழியன், பழனி, சித்ரா, உமாமகேஸ்வரி, காந்திமதி, அருட்செல்வன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியை தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழக பொறுப்பாளர்கள் செல்வம், அஜீஸ்குமார், சதீஷ் குமார் ஆகியோர் ஒருங்கிணைத் தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT