Published : 14 Apr 2021 03:14 AM
Last Updated : 14 Apr 2021 03:14 AM
ராமநாதபுரம் அரசுமருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிடி ஸ்கேன் பழுதானதால் நோயாளி கள் அவதிப்படுகின்றனர்.
ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தினமும் ஆயிரக்கணக்கான வெளி நோயாளிகளும், அவசரச் சிகிச்சைக்கு நூற்றுக்கும் மேற்பட்ட நோயாளிகளும் வந்து செல்கின்றனர். அவர்களில் விபத்தில் காயமடைந்து வருவோர், தலைக்காயம் ஏற்பட்டு வருவோருக்கு சிடி ஸ்கேன் எடுக்கப்படுகிறது.
இங்கு மருத்துவச் சேவைக் கழகம் சார்பில் சிடி ஸ்கேன் எடுப்பதற்கு ரூ.500-ம், ஊசி செலுத்தி எடுப்பதற்கு கூடுதலாக ரூ.300 என மொத்தம் ரூ.800 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. தனியாரிடம் சிடி ஸ்கேன் எடுப்பதற்கு தலா ரூ.2,500 மற்றும் ஊசி செலுத்தி எடுப்பதற்கு தனியாக ரூ.1,500 என மொத்தம் ரூ.4 ஆயிரம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனால் நோயாளிகள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.
அரசு மருத்துவமனையில் தினமும் குறைந்தது 100 பேர் வரை சிடி ஸ்கேன் எடுத்து வருகின்றனர். இங்குள்ள சிடி ஸ்கேன் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் பழுது ஏற்பட்டு செயல்படவில்லை. இதனால் தலைக்காயம் உள்ளிட்ட பாதிப்புக்குள்ளான நோயாளி களைக்கூட தனியார் ஸ்கேன் மையங்களுக்கு மருத்துவர்கள் அனுப்பும் நிலை உள்ளது.
இதுகுறித்து மருத்துவமனை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, சிடி ஸ்கேன் சாதனத்தை அமைத்த நிறுவனத்திடம் பழுது குறித்து கூறப்பட்டுள்ளது. ஓரிரு நாளில் சரி செய்யப்பட்டு சிடி ஸ்கேன் செயல்படத் தொடங்கும் எனத் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT