Published : 13 Apr 2021 03:13 AM
Last Updated : 13 Apr 2021 03:13 AM
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல் படி, கடலூர் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் எம்ஆர்கே.பன்னீர்செல்வத்தின் வழிகாட்டுதலின் படி நேற்று கடலூர் துறைமுகம் பகுதியில் 41 வது வார்டில் திமுக சார்பில் பொதுமக்களுக்கு இலவசமாக முகக்கவசங்கள் வழங்கப்பட்டன.
நகர கழக செயலாளர் ராஜா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இளபுகழேந்தி ஆகியோர் பங்கேற்று அப்பகுதி மக்களுக்கு இலவசமாக முகக்கவசங்களை வழங்கினர். இதற்கான ஏற்பாடுகளை பொறுப்பாளர் அபிநயா கண்ணன் செய்திருந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT