Published : 13 Apr 2021 03:14 AM
Last Updated : 13 Apr 2021 03:14 AM
திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிமுக சார்பில் அமைக்கப்பட்ட 10 தண்ணீர் பந்தல்களை மாவட்டச் செயலாளர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி திறந்து வைத்தார்.
அரசு போக்குவரத்து கழக அண்ணா தொழிற்சங்கம் சார்பில் திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையத்தில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது. தொழிற்சங்க செயலாளர் மனோகரன் தலைமை வகித்தார். அண்ணா தொழிற்சங்க பேரவை மாநில செயலாளர் கமலக்கண்ணன், மாவட்ட அதிமுக செயலாளர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் திறந்து வைத்தனர்.
இதேபோல், அதிமுக சார்பில் காட்டாம்பூண்டியில் ஒன்றியச் செயலாளர் கலியபெருமாள் தலைமையிலும், ராதாபுரத்தில் ஒன்றியச் செயலாளர் தேவராஜன் தலைமையிலும், தண்டராம்பட்டு பேருந்து நிலையத்தில் ஒன்றியச் செயலாளர் ஜானகிராமன் தலைமையிலும், சொர்ப்பனந்தல் கிராமத்தில் ஒன்றியச் செயலாளர் அருணாச்சலம் தலைமையிலும், செங்கத்தில் ஒன்றியச் செயலாளர் மனோகரன் தலைமையிலும், கிளையூரில் ஒன்றியச் செயலாளர் அசோக் தலைமையிலும், நாயுடு மங்கலத்தில் ஒன்றியச் செயலாளர் கோவிந்தராஜ் தலைமையிலும் என 10 இடங்களில் தண்ணீர் பந்தல்கள் திறக்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட அதிமுக செயலாளர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி திறந்து வைத்து நீர்மோர், இளநீர் தற்றும் தர்பூசணியை வழங்கினார். இதில், மாவட்டப் பொருளாளர் நைனாகண்ணு, மாவட்ட இலக்கிய அணி செயலாளர் நாராயணன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT