Published : 12 Apr 2021 03:19 AM
Last Updated : 12 Apr 2021 03:19 AM
ஈரோடு மாநகராட்சி வாகன ஸ்டாண்டில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் புகார் செய்யலாம், என மாநகராட்சி ஆணையர் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு பேருந்து நிலைய வணிக வளாகத்தின் தரை தளத்தில் மாநகராட்சிக்கு சொந்தமான இரு சக்கர வாகனம் நிறுத்தும் இடம் உள்ளது. அங்கு சைக்கிளுக்கு ரூ.5, பிற இரு சக்கர வாகனங்களுக்கு ரூ.10 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனினும், விதிமுறைகளை மீறி இரு சக்கர வாகனங்களுக்கு ரூ.15 வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்தது.
இதுதொடர்பாக ஸ்டாண்ட் நடத்துபவர்களிடம் வாகனம் நிறுத்துபவர்கள் கேள்வி எழுப்பி யுள்ளனர். அப்போது கட்டணம் ரூ.10, ஜிஎஸ்டி ரூ.5 என மொத்தம் ரூ.15 வசூலிக்கப்படுவதாக தெரிவித்துள்ளனர். இந்த உடைரயாடல் மற்றும் வீடியோ பதிவு சமூக ஊடங்களில் வெளியானது.
இதையறிந்த மாநகராட்சி ஆணையர் இளங்கோவன், இதுதொடர்பாக விசாரணை நடத்த வருவாய் உதவி ஆணையர் தலைமையில் குழு அமைத்து உத்தரவிட்டுள்ளார். மேலும், ஈரோடு மாநகராட்சிக்கு சொந்தமான குத்தகையினங்கள் மற்றும் இரு சக்கர வாகன ஸ்டாண்டில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் 180042594890 என்ற மாநகராட்சியின் கட்டணம் இல்லாதொலைபேசி எண்ணில் புகார் அளிக்கலாம், என தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT