Published : 12 Apr 2021 03:19 AM
Last Updated : 12 Apr 2021 03:19 AM

மக்கள் நீதிமன்றத்தில் 1,041 வழக்குக்கு தீர்வு : பிரிந்திருந்த 7 தம்பதிகள் ஒன்றிணைந்தனர் :

திருவள்ளூர்: திருவள்ளூர் ஒருங்கிணைந்த நீதிமன்றம் மற்றும் திருத்தணி, பள்ளிப்பட்டு, ஊத்துக்கோட்டை, கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, பூந்தமல்லி, அம்பத்தூர், மாதவரம், திருவொற்றியூர் ஆகிய தாலுகா நீதிமன்றங்களில், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு சார்பில் நேற்று முன்தினம் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.

மாவட்ட முதன்மை நீதிபதி செல்வநாதன், மாவட்ட மக்கள் நீதிமன்றத் தலைவர் சரஸ்வதி, நீதிபதிகள் பரணிதரன், மெவிஸ் தீபிகா சுந்தரவதனா, வித்யா, ரவி, உமா, அருந்ததி, சுபாஷினி, ராதிகா, இளவரசி, கமலா உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த மக்கள் நீதிமன்றத்தில், மொத்தம் எடுக்கப்பட்ட 2,619 வழக்குகளில், 1,041 வழக்குகள் முடித்துவைக்கப்பட்டு, ரூ.342 கோடியே 27 லட்சத்து 41 ஆயிரத்து 208 இழப்பீடு மற்றும் அபராதம் வழங்க உத்தரவிடப்பட்டது. மேலும், பிரிந்திருந்த 7 தம்பதிகள் சமரசம் செய்துவைக்கப்பட்டு, ஒன்றிணைந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x