Published : 11 Apr 2021 03:16 AM
Last Updated : 11 Apr 2021 03:16 AM
சமூக இடைவெளியை பின்பற்றாத வணிக நிறுவனங்களுக்கு சீல் வைக்க கடலூர் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
கடலூர் மாவட்டத்தில் கரோனா தடுப்பு நடவ டிக்கைகளை மேற்கொள்வது குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்துத்துறை அலுவலர்களுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரி பேசியது:
மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் கிருமி நாசினி தெளிப்பதை விரைவு படுத்த வேண்டும். கரோனா பரவல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பொதுமக்களுக்கு சளி,காய்ச்சல் போன்ற பாதிப்புகள் தெரியவந்தால் அவர்களை உடனடியாக கரோனா பரிசோதனை மேற்கொள்ள அறிவுறுத்த வேண்டும். கரோனா பாதிக்கப்பட்ட நபர்களின் தொடர்பில் உள்ளவர்களை கண்டறிந்து அவர்களுக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.
ஒரே பகுதியில் மூன்றுக்கு மேற்பட்ட கரோனா நோயாளிகள் இருந்தால் அப்பகுதியை தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டும்.
கடலூர், பண்ருட்டி, சிதம்பரம், திட்டக்குடி, வேப்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கரோனா பாதுகாப்பு மையத்தை அனைத்து அடிப்படை வசதிகளுடன் செயல்பட தயார் நிலையில் வைக்க வேண்டும். முகக்கவசம் அணியாமல் வரும் நபர்களிடம் அபராத தொகை வசூலிக்க வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்றாத வணிக நிறுவனங்களுக்கு சீல் வைக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிநவ்,திட்ட இயக்குநர் (ஊரக வளர்ச்சி)மகேந்திரன், இணை இயக்குநர் (நலப்பணிகள்) மருத்துவர் ரமேஷ்பாபு, துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) மருத்துவர் செந்தில்குமார் உட்பட பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
ஒரே பகுதியில் மூன்றுக்கு மேற்பட்ட கரோனா நோயாளிகள் இருந்தால் அப்பகுதியை தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT