Published : 10 Apr 2021 03:13 AM
Last Updated : 10 Apr 2021 03:13 AM

திருப்போரூர் ரேஷன் கடை விற்பனையாளர் மீது புகார் மனு :

திருப்போரூர்: செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ரவுண்டானா அருகே தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கியின்கீழ் ரேஷன் கடை செயல்பட்டு வருகிறது. இங்கு, படவேட்டம்மன் கோயில் தெரு, சான்றோர் வீதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மக்கள், அத்தியாவசியப் பொருட்களை வாங்கி வருகின்றனர். இந்நிலையில், இக்கடையின் விற்பனையாளர்கள், பொருட்களை வாங்க வரும் பெண்களிடம் ஒருமையில் பேசுவதாகவும், முறையாக பொருட்களை வழங்குவதில்லை என்றும் புகார்கள் எழுந்தன.

இந்நிலையில், கடை விற்பனையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், அனைத்து கார்டுதாரர்களுக்கும் முறையாக அத்தியாவசியப் பொருட்களை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் லிங்கன் தலைமையில், அக்கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள், திருப்போரூர் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கி செயலர் பாலகிருஷ்ணனிடம் நேற்று மனு அளித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x