Published : 08 Apr 2021 03:13 AM
Last Updated : 08 Apr 2021 03:13 AM

கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் - 11 வாக்கு எண்ணும் மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு :

சிதம்பரம் அருகே சி.முட்லூர் அரசு கல்லூரியில் வாக்கு பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்ட அறைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

கடலூர்/விழுப்புரம்

கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் உள்ள 11 வாக்கு எண்ணும் மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளிலும் 3,001 வாக்கு சாவடி மையங்களில் நேற்று முன்தினம் தேர்தல் முடிந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் அந்தந்த வாக்கு எண்ணும் மையங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டது. கடலூர், குறிஞ்சிப்பாடி தொகுதிகளின் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையமான கடலூர் பெரியார் அரசு கல்லூரியிலும், காட்டுமன்னார்கோவில்(தனி), சிதம்பரம், புவனகிரி தொகுதிகளின் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சிதம்பரம் அருகே சி.முட்லூரில் உள்ள அரசு கல்லூரியிலும், நெய்வேலி, பண்ருட்டிதொகுதிகளின் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பண்ருட்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்திலும், விருத்தாசலம், திட்டக்குடி தொகுதிகளின் வாக்குப்பதிவு இயந்திரங்கள் விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கல்லூரியிலும் பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டு அங்குள்ள அறைகளில்வேட்பாளர்களின் ஏஜென்ட்கள் முன்னிலையில் சீல் வைக்கப் பட்டது.

விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சி தொகுதியின் வாக்குப்பதிவு இயந்திரங்கள் செஞ்சி மேல்கலவாய் காரியமங்கலம் சாலையில் அமைந்துள்ள டேனி கல்வியியல் கல்லூரியிலும், மயிலம், திண்டிவனம் (தனி) தொகுதிகளின் வாக்குப்பதிவு இயந்திரங்கள் திண்டிவனம் அரசு பொறியியல் கல்லூரியிலும், வானூர் (தனி) தொகுதியின் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வானூர் அருகே ஆகாசம் பட்டு  அரவிந்தர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும், விழுப்புரம் தொகுதியின் வாக்குப்பதிவு இயந்திரங்கள் விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசுகலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும், விக்கிரவாண்டி தொகுதியின் வாக்குப்பதிவு இயந்திரங்கள் விழுப்புரம் ஏழுமலை பாலிடெக்னிக் கல்லூரியிலும் , திருக்கோவிலூர் தொகுதியின் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கண்டாச்சிபுரம் வள்ளியம்மை மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும் பாதுகாப்பாக வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ளகள்ளக்குறிச்சி (தனி), உளுந்தூர்பேட்டை, சங்கராபுரம், ரிஷிவந்தியம் தொகுதிகளின் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கள்ளக்குறிச்சி அருகே நீலமங்க லத்தில் உள்ள ஏகேடி கல்வி வாளாகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளது. கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்களில் உள்ள 11 வாக்கு எண்ணும் மையங்களிலும் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x