Published : 07 Apr 2021 03:17 AM
Last Updated : 07 Apr 2021 03:17 AM
கரூர் தொகுதியில் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், எம்எல்ஏ செந்தில்பாலாஜி ஆகியோரும், அரவக்குறிச்சி தொகுதியில் எம்.பி ஜோதிமணியும் வாக்களித்தனர்.
கரூர் தொகுதி அதிமுக வேட்பாளரும், மாநில போக்குவரத்துத் துறை அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆண்டாங்கோவில் அரசு உயர்நிலைப் பள்ளி வாக்குச் சாவடியில் வரிசையில் நின்று வாக்களித்தார். அதன் பின்னர், செய்தி யாளர்களிடம் அமைச்சர் கூறியது:
கரூர் தொகுதியில் 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறு வேன். அதிமுக மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்றார்.
கரூர் தொகுதி திமுக வேட்பாளரும், மாவட்ட திமுக பொறுப்பாளரும், எம்எல்ஏவுமான வி.செந்தில்பாலாஜி ராமேஸ்வரப்பட்டியை அடுத்த புதுப்பாளையத் தில் உள்ள ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடியில் நேற்று வரிசையின் நின்று வாக்களித்தார். பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
இது ஆட்சி மாற்றத்திற்கான தேர்தல். திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையிலான மதச்சார்பற்ற முற் போக்குக்கூட்டணி தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். கரூர் தொகுதியில் 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் நான் வெற்றி பெறு வேன் என்றார். அப்போது, எம்.பி செ.ஜோதிமணி உடனிருந் தார்.
அரவக்குறிச்சி தொகுதி பாஜக வேட்பாளர் கே.அண்ணாமலை அரவக்குறிச்சி தொகுதி சூடாமணி ஊராட்சி ஊத்துப்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் அமைந்துள்ள வாக்குச் சாவடியில் வாக்களித்தார்.
கரூர் மாவட்டம் பெரியதிரு மங்கலம் ஊராட்சி ஒன்றிய நடு நிலைப் பள்ளியில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் கரூர் எம்.பி. செ.ஜோதிமணி வாக்களித்தார்.
அரவக்குறிச்சி தொகுதி திமுக வேட்பாளர் ஆர்.இளங்கோ, கிருஷ்ணராயபுரம் தொகுதி அதிமுக வேட்பாளர் என்.முத்துக்குமார், திமுக வேட்பாளர் சிவகாமசுந்தரி, குளித்தலை தொகுதி திமுக வேட்பாளர் ரா.மாணிக்கம், அதி முக வேட்பாளர் என்.ஆர்.சந்திரசே கரன் ஆகியோரும் நேற்று வாக்க ளித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT