Published : 06 Apr 2021 03:15 AM
Last Updated : 06 Apr 2021 03:15 AM

கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் - 49.05 லட்சம் பேர் வாக்களிக்க ஏற்பாடுகள் தயார் : 83 வாக்குச்சாவடிகள் மிகப் பதற்றமானவை

கடலூர்/விழுப்புரம்/கள்ளக்குறிச்சி

கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் மொத்தம் உள்ள 20தொகுதிகளில் 49.05 லட்சம் வாக்காளர் கள் வாக்களிக்க அனைத்துத் தொகுதிக ளிலும் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 83 வாக்குச் சாவடிகள் மிகப் பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகளாக கண்டறியப்பட்டு, அங்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கடலூர் மாவட்டத்தில் உள்ள திட்டக்குடி (தனி) தொகுதியில் 305, விருத்தாசலம் தொகுதியில் 355, நெய்வேலி தொகுதியில் 299, பண்ருட்டி தொகுதியில் 341, கடலூர் தொகுதியில் 343, குறிஞ்சிப்பாடி தொகுதியில் 336, புவனகிரி தொகுதியில் 350, சிதம்பரம் தொகுதியில் 354, காட்டுமன்னார்கோவில் (தனி) தொகுதியில் 318 என மொத்தம் உள்ள 9 தொகுதிகளில் 3,001 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு பயன்படுத்த 3,877 வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பப்பட்டுள்ளன. 14,404 பேர் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர். ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் 2 பேர் வீதம் 6,002 சுகாதாரப்பணியாளர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுகின்றனர்.

கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளில் 21,41,395 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இவர்களில் ஆண்வாக்காளர்கள் 10,55,291. பெண் வாக்காளர் கள் 10,86,436. 208 திருநங்கைகளும் வாக்களிக்க உள்ளனர்.

மாவட்டத்தில் உள்ள 3,001 வாக்குச் சாவடிகளில் 28 மிக பதற்றமானவை, 183 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என அறிவிக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் டிஐஜி பாண்டியன், எஸ்பி அபிநவ் ஆகியோர் தலைமையில் காவல் அதிகாரிகள், 15 கம்பெனி மத்திய பாதுகாப்பு படையினர், துணை ராணுவத்தினர், முன்னாள் படைவீரர்கள் உள்ளிட்ட 5,501 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

விழுப்புரம் மாவட்டத்தில்

16.84 லட்சம் வாக்காளர்கள்

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சி தொகுதியில் 363, மயிலம் தொகுதியில் 368, திண்டிவனம் (தனி) தொகுதியில் 388, வானூர் (தனி) தொகு தியில் 393, விழுப்புரம் தொகுதியில் 444,விக்கிரவாண்டி தொகுதியில் 396, திருக்கோவிலூர் தொகுதியில் 419 என மாவட்டத்தில் உள்ள 7 தொகுதிகளில் 2,368 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 3,179 வாக்குப்பதிவு இயந்திரங்கள் அந்தந்த தொகுதிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன. 11,368 பேர் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர்.

ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் 2 பேர் வீதம் 4,736 சுகாதாரப்பணியாளர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுகின்றனர். இவர்கள்வாக்காளர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை செய்து, சானிடைசர், கையுறை வழங்குவார்கள்.

மாவட்டத்தில் உள்ள 7 தொகுதிகளில் 16,84,504 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இவர்களில் 8,51,082 பெண் வாக்காளர்கள். 215 திருநங்கைகளும் வாக்களிக்கின்றனர்.

மாவட்டத்தில் உள்ள 2,368 வாக்குச் சாவடிகளில் 33 வாக்குச்சாவடிகள் மிகபதற்றமானவை. 53 வாக்குச்சாவடிகள் பதற் றமானவை என அறிவிக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் டிஐஜி பாண்டியன், எஸ்பி ராதாகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் காவல் அதிகாரிகள், 8 கம்பெனி மத்திய பாதுகாப்பு படையினர், துணை ராணுவத்தினர், முன்னாள் படைவீரர்கள் உள்ளிட்ட 4,002 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில்

10.80 லட்சம் வாக்காளர்கள்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கள்ளக்குறிச்சி தனி தொகுதியில் 427, உளுந்தூர்பேட்டையில் 407, ரிஷிவந்தியம் தொகுதியில் 374, சங்கராபுரம் தொகுதி யில் 372 என மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளில் 1,569 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 7,568 வாக்குச்சாவடி அலுவலர்கள் பணிபுரிய உள்ளனர். ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் 2 பேர் வீதம் 3118 சுகாதாரப்பணியாளர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுகின்றனர்.

மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளில் 10 லட்சத்து 80 ஆயிரத்து 525 வாக் காளர்கள் உள்ளனர்.

இவர்களில் 5, 43,472 ஆண் வாக்காளர் களும், 5,36,851 பெண் வாக்காளர்களும் உள்ளனர். மேலும் 202 திருநங்கைகளும் வாக்களிக்கவுள்ளனர். மாவட்டத்தில் உள்ள 1,569 வாக்குச்சாவடிகளில் 22 வாக்குச்சாவடிகள் மிகபதற்றமானவை. 92 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி எஸ்பி ஜியாவுல்ஹக் தலைமையில் காவல் அதிகாரிகள், மத்திய பாதுகாப்பு படையினர், துணை ராணுவத்தினர், முன்னாள் படைவீரர்கள் உள்ளிட்ட2,255 பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x