Published : 03 Apr 2021 03:14 AM
Last Updated : 03 Apr 2021 03:14 AM

விக்கிரவாண்டி அருகே - தேர்தல் பறக்கும் படையினரால் ரூ.10.77 லட்சம் பறிமுதல் :

விழுப்புரம்

விக்கிரவாண்டி அருகே இரு நபர்களிடமிருந்து உரிய ஆவணமின்றி எடுத்துச் சென்ற ரூபாய் 10 லட்சத்து 77,500-யை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

விக்கிரவாண்டி தொகுதி தேர்தல் பறக்கும் படை நிலைகண்காணிப்பு குழு அலுவலர் கோதண்டபாணி தலைமையிலான குழுவினர் நேற்று காலை,விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர் .

அப்போது அவ்வழியே வந்த இன்னோவா காரை நிறுத்தி, வாகன தணிக்கை செய்த போது ராணிப்பேட்டை மாவட்டம் , நெமிலி அருகே உள்ள பணப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவர் ரூ10 லட்சத்தை , விருதாச்சலத்திற்கு எடுத்துச் செல்வது தெரிய விசாரணையில் எடுத்து செல்வது தெரிய வந்தது. அவர், தனது தொழில் தேவைக்காக இதை எடுத்துச் செல்வதாக தெரிவித்தார். இருப்பினும், அவரிடம் உரிய ஆவணங்கள் ஏதுமில்லை.

தகவலறிந்த சென்னை வருமான வரித்துறை துணை ஆணையர் கமலாதேவி தலைமையில் பாலதண்டாயுதம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து, விசாரணை செய்து ரூ.10 லட்சத்தை பறிமுதல் செய்தனர் .

இதே போல தேர்தல் பறக்கும் படை நிலை கண்காணிப்பு குழு அலுவலர் கருணாநிதி தலைமையில் நேமூர் கூட்ரோடு அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது அவ்வழியே வந்த பைக்கை நிறுத்தி சோதனை செய்த போது செஞ்சி அடுத்த நகனுாரை சேர்ந்த குமார் என்பவர் உரிய ஆவணமின்றி ரூ. 77, 500 எடுத்து செல்வது தெரிய வந்தது. பறிமுதல் செய்த பணத்தை விக்கிரவாண்டி தொகுதி தேர்தல் நடத்து அலுவலர் அறிவுடைநம்பியிடம் ஒப்படைத்தனர் .

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x