Published : 02 Apr 2021 03:13 AM
Last Updated : 02 Apr 2021 03:13 AM
சங்கராபுரம் தொகுதியில் பாமக வேட்பாளர் வெற்றி பெறும் பட்சத்தில் கல்வராயன்மலையை சுற்றுலாத் தலமாக மாற்ற முதல்வ ருக்கு பரிந்துரைத்து, மாற்றப்படும் என தேர்தல் பிரச்சாரத்தில் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வாக்குறுதி அளித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் தொகுதியில் போட்டி யிடும் அதிமுக கூட்டணி தலைமையிலான பாமக வேட்பாளர் ஜே.ராஜாவை ஆதரித்து பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று வடக் கனந்தல் கிராமத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசுகையில், “அதிமுக தலைமையிலான கூட்டணி மக்கள் சேவையாற்றும் கூட்டணி. ஒரு விவசாயி முதல்வராக உள்ளார். விவசாயிகளின் தேவையறிந்து பயிர்க்கடனை 3 மாதங்க ளுக்கு முன்பே தள்ளுபடி செய்துள்ளார். ஆனால் திமுக அதை காப்பி யடித்து தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளனர்.
அதிமுக - பாமக தேர்தல் அறிக்கை வளர்ச்சியை நோக்கியது. சங்கராபுரம் தொகுதியில் 2001-ல்பாமகவிடம் தோல்வியடைந்த நபர் தான் எதிரணியில் போட்டியிடுகிறார். அவருக்கு தக்க பதிலடி தரும் வகையில் அதிமுக - பாமகவினர் இணைந்து தேர்தல் பணியாற்ற வேண்டும். திமுகவுக்கு வாக்களித்தால் அதன்விளைவுகளை சந்திக்க வேண்டியி ருக்கும்.
அவர்கள் வெற்றி பெற்றால் கல்வராயன்மலையை வெட்டி அழித்து விடுவர். பாமக வேட்பா ளர் ராஜா வெற்றிபெற்றால் கல்வராயன்மலை சுற்றுலாத் தலமாக மாற்றப்படுவதோடு, கோமுகி அணை தூர்வாரப்படும், நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்படும்.
சங்கராபுரம் மருத்துவமனை மாவட்ட மருத்துவமனையாக தரம் உயர்த்தப்படும். இந்தத் தொகுதியில் பல வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படும். இத்தொகுதியில் வெற்றி பெற முன்னாள் அமைச்சர் மோகனிடம் தேர்தல் பணி ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.
எனவே அனைவரும் இணைந்து ராஜாவை வெற்றிபெறச் செய்ய வேண்டும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT