Published : 31 Mar 2021 03:17 AM
Last Updated : 31 Mar 2021 03:17 AM

5 தொகுதிகளில் உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களில் - புகைப்படத்துடன் கூடிய சின்னங்கள் பொருத்தும் பணி : வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் நேரில் ஆய்வு

வேலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர், படத்துடன் சின்னம் பொருத்தும் பணி நடைபெற்றது. படம்: வி.எம்.மணிநாதன்.

வேலூர்

வேலூர் மாவட்டத்தில் உள்ள 5 சட்டப்பேரவைத் தொகுதிகளில் போட்டியிடும் 70 வேட்பாளர்களின் புகைப்படத்துடன் கூடிய சின் னங்கள் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பொருத்தும் பணி நடைபெற்றது. இதனை, வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரம் ஆய்வு செய்தார்.

தமிழக சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தல் வரும் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை மே 2-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், வேலூர் மாவட்டத்தில் உள்ள 5 சட்டப்பேரவைத் தொகுதிகளுக் கான வேட்பு மனுத்தாக்கல் கடந்த 12-ம் தேதி தொடங்கி 19-ம் தேதி யுடன் நிறைவு பெற்றது.

கடந்த 21-ம் தேதி மனுக்கள் திரும்பப்பெற கடைசி நாள் என்பதால் அன்றைய தினமே இறுதி வேட்பாளர் பட்டியல் சின்னங் களுடன் வெளியிடப்பட்டன. அதன்படி, காட்பாடி தொகுதியில் 15 வேட்பாளர்கள், வேலூர் தொகுதியில் 17 வேட்பாளர்கள், அணைக்கட்டு தொகுதியில் 13 வேட்பாளர்கள், கே.வி.குப்பம் (தனி) தொகுதியில் 10 வேட்பாளர்கள், குடியாத்தம் (தனி) தொகுதியில் 15 வேட்பாளர்கள் என மொத்தம் 70 பேர் போட்டியிட உள்ளனர்.

1,783 வாக்குச்சாவடிகள்

வேலூர் மாவட்டத்தில் உள்ள 5 சட்டப்பேரவைத் தொகுதிகளில் கரோனா பரவலை தடுக்கும் வகையில், 48 பள்ளி வளாகங்களில் 1,783 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வாக்குச்சாவடிகள் 149 மண்ட லங்களாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு மண்டலத்துக்கும் 12 முதல் 15 வரையிலான வாக்குச் சாவடிகள் இணைக்கப்பட்டுள்ளன.

மொத்தமுள்ள 1,783 வாக்குச் சாவடிகளில் காட்பாடி தொகுதியில் 349 வாக்குச்சாவடிகள், வேலூரில் 364, அணைக்கட்டில் 351, கே.வி.குப்பத்தில் 311, குடியாத்தத்தில் 408 வாக்குச்சாவடிகள் உள்ளன.

இதில், காட்பாடி தொகுதியில் 1,964 பேரும், வேலூரில் 2,029 பேரும், அணைக்கட்டில் 1,951 பேரும், கே.வி.குப்பத்தில் 1,278 பேரும், குடியாத்தத்தில் 1,338 பேரும் என மொத்தம் 8,560 பேர் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர்.

வாக்குப்பதிவு இயந்திரங்கள்

5 சட்டப்பேரவைத் தொகுதி களில் பயன்படுத்த உள்ள 2,140 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் 2,140 மின்னணு கட்டுப்பாட்டு கருவிகள் மற்றும் யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் 2,296 விவிபாட் இயந்திரங்களும் பாதுகாப்பாக அந்தந்த தொகுதிகளில் உள்ள வட்டாட்சியர் அலுவலகங்களில் பாதுகாப்பாக வைத்துள்ளனர். மின்னணு வாக்குப்பதிவு இயந் திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறை பூட்டி ‘சீல்' வைக்கப்பட்டு துப்பாக்கி ஏந்திய காவல் துறையினர் பாதுகாப்புக்காக நிறுத்தப் பட்டுள்ளனர்.

வேலூரில் 2 இயந்திரங்கள்

ஒவ்வொரு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்திலும் 16 வேட்பாளர்களுக்கான வாக்களிக்கும் பொத்தான்கள் இருக்கும். இதில், 15 வேட்பாளர்களுக்குள் இருந்தால் ஒரே இயந்திரத்தில் 15 வேட்பாளர்கள் மற்றும் ஒரு நோட்டாவுக்கான சின்னங்கள் பொருத்த முடியும். 15 வேட்பாளர்களுக்கும் அதிக மானோர் போட்டியிட்டால் அங்கு இரண்டாவது மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் பயன்படுத் தப்படும். அந்த வகையில் வேலூர் தொகுதியில் மட்டும் 17 வேட்பாளர்கள் போட்டியிடுவதால் இரண்டு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்த வுள்ளனர். இதற்காக, கூடுல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஏற்கெனவே வேலூர் தொகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

சின்னங்கள் பொருத்தும் பணி

வேலூர் மாவட்டத்தில் உள்ள 5 சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் புகைப்படத்துடன் கூடிய சின்னம் பொருத்தும் பணி நேற்று ஒரே கட்டமாக நடைபெற்றது. ஒவ்வொரு தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலர் முன்னிலையில் சின்னங்கள் பொருத்தும் பணி நடைபெற்றது.

ஒவ்வொரு தொகுதியில் வாக்குச்சாவடிகளின் எண்ணிக் கைக்கு ஏற்ப 20 சதவீதம் வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னங்கள் பொருத்தப்பட்டன. வாக்குப்பதிவுக்கு முன்தினம் வாக்குச்சாவடிகளுக்கு தேவையான எண்ணிக்கையிலான இயந்திரங்கள் மட்டும் அனுப்பி வைக்கப்படும். வாக்குப்பதிவு நடைபெறும் நாளில் அந்த இயந்திரங்களில் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் மாற்று இயந்திரங்களை பயன்படுத்த தயார் நிலையில் பாது காப்பாக வைக்கவுள்ளனர்.

இதற்கிடையில், 5 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் நடை பெற்ற சின்னங்கள் பொருத்தும் பணியை வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் நேரில் சென்று ஆய்வு செய்தார். வேலூர் தொகுதியில் மொத்தம் 364 வாக்குச்சாவடிகள் உள்ளன. இங்கு, 2 வாக்குப்பதிவு இயந்திரங்கள் வீதம் மொத்தம் 728 மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தவுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x