தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக 858 வழக்குகள் :

தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக 858 வழக்குகள் :

Published on

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இதுவரை தேர்தல் நன்னடத்தை விதிகளை மீறி பொது இடம் மற்றும் சுவற்றில் கட்சி சார்பாக படம் மற்றும் கட்சிக் கொடி வரைந்த கட்சி நிர்வாகிகள் மீது இதுவரை 645 வழக்குகளும், தேர்தல் நன்னடத்தை விதிகளை மீறி பிரச்சாரத்தில் ஈடுபட்டோர் மீது 213 வழக்குகளும், என மொத்தம் 858 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

தேர்தல் நடத்தும் அலுவலரிடம் அனுமதி பெற்ற வாகனத்தை மட்டுமே பிரச்சாரத்தில் பயன்படுத்தவேண்டும். அவ்வாறு அனுமதி பெறாமல் பிரச்சாரத்தில் ஈடுபடுத்தப்படும் வாகனத்தின் உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்வதுடன், வாகனமும் பறிமுதல் செய்யப்படும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் நன்னடத்தை விதிகளை மீறி பிரச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட 15 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in