Published : 29 Mar 2021 03:15 AM
Last Updated : 29 Mar 2021 03:15 AM
கொங்குநாடு இன்ஜினியரிங் கல்லூரி மெக்கானிக்கல் துறை மாணவர்களுக்கு டிரோன் தொழில்நுட்பம் குறித்து 3 நாட்கள் சிறப்பு பயிற்சி நடைபெற்றது.
தோளூர்பட்டி கொங்குநாடு இன்ஜினியரிங் கல்லூரி மெக்கானிக்கல் துறை மாணவர் களுக்கான டிரோன் தொழில் நுட்பம் குறித்து இன்ஸ்டிடியூட் ஆப் ஏரோநாட்டிக்ஸ் அஸ்ட்ரா நாட்டிக்ஸ் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தும் நிகழ்ச்சி கல்லூரியில் நடை பெற்றது. கல்லூரி சேர்மன் பெரியசாமி தலைமை வகித்தார்.செயலாளர் பிஎஸ்டி கன்ஸ்ட்ரக்சன்ஸ் தென்னரசு முன்னிலைவகித்தார். சென்னைஇன்ஸ்டிட்யூட் ஆப் ஏரோ நாட்டிக்ஸ் அஸ்ட்ராநாட்டிக்ஸ் மற்றும் ஏவியேசன் இயக்குநர் கிஷோர், துணைநிறுவனர் கருணாகரன் மற்றும் ஆர் அண்ட் டி தலைவர் தினேஸ்குமார் ஆகியோர் கலந்து கொண்டு டிரோன் தொழில்நுட்பம் மற்றும் தொழிற்சாலைகளில் டிரோன் பங்களிப்பு குறித்து பேசினர். மூன்று நாட்கள் நடைபெற்ற நிகழ்ச்சியில் டிரோன் மற்றும் சிறிய ரக விமானங்களை இயக்குவதற்கான செய்முறை உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப் பட்டன.
முன்னதாக கல்லூரி முதல்வர் அசோகன் பயிற்சி குறித்து விளக்கிப் பேசினார். கல்லூரி ஆர் அண்ட் டி டீன் அலுவலர் யோகப்பிரியா டிரோன் தொழில் நுட்பம் குறித்துப் பேசினார். மெக்கானிக்கல் துறைத்தலைவர் ஜெகதீஷ் உள்பட பலர் பேசினர். முகாமில் கல்லூரி மாணவர்கள் டிரோன் மற்றும் சிறிய ரக விமான வான்வெளி சாகசங்களை செய்து திறமைகளை வெளிப் படுத்தினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT