Published : 28 Mar 2021 03:17 AM
Last Updated : 28 Mar 2021 03:17 AM
குமாரபாளையம் சட்டப்பேரவைத் தொகுதியில் அமமுக கூட்டணிசார்பில் தேமுதிக வேட்பாளர் சிவசுப்ரமணியம் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் குமாரபாளையத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது:
மக்களுக்கு நல்லது செய்யத்தான் இந்த கூட்டணியை அமைத்துள் ளோம். திமுக மற்றும் அதிமுகவுக்கு மாற்றாகத்தான் தேமுதிக ஆரம்பிக்கப்பட்டது. தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்றும் மக்களுக்காக உழைத்து கொண்டுள்ளார். அவரது கனவை நிறைவேற்ற நான் வந்துள்ளேன்.
விஜயகாந்த் பணத்தை சம்பாதிக்கவில்லை. மக்களின் அன்பை சம்பாதித்துள்ளார். இன்று ரூ.1000 தருகிறேன், ரூ.1, 500 தருகிறேன் என்று கூறுபவர்கள் கரோனா காலத்தில் என்ன செய்தார்கள். வாஷிங் மெஷின் தருவதாக கூறுகிறார்கள். ஆறு மாதம் தான் ஓடும். எந்த அடிப்படை வசதியும் இல்லாமல் வாஷிங்மெஷின் கொடுத்து என்ன பயன்.
டிடிவி.தினகரன் முதல்வர் ஆகட்டும். எங்களுக்கு ஈகோ இல்லை. ஈகோவால் எந்த பலனும் இல்லை. உண்மையான அதிமுக தொண்டர்கள் அமமுகவில் தான் உள்ளனர்.
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக பிரச்சாரத்தின் போது, கரோனா காலத்தில் அரசு மேற்கொண்ட நடவடிக்கை குறித்து விமர்சித்துப் பேசினார். அப்போது குறிக்கிட்ட மக்கள் நீங்கள் என்ன செய்தீர்கள்? என கேள்வி எழுப்பினர். அதற்கு விஜயபிரபாகரன், எங்களுக்குவாய்ப்பு கொடுக்காமல் கேள்வி கேட்காதீர்கள், என்றார். அவரதுபதிலால் அங்கிருந்த மக்கள் அதிருப்தியடைந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT