Published : 28 Mar 2021 03:18 AM
Last Updated : 28 Mar 2021 03:18 AM

நவீன தறிகளில் பணி செய்ய விசைத்தறியாளர்களுக்கு பயிற்சி : ஈரோடு மேற்கு தொகுதி அதிமுக வேட்பாளர் கே.வி.ராமலிங்கம் உறுதி

ஈரோடு மேற்கு தொகுதி அதிமுக வேட்பாளர் கே.வி.ராமலிங்கம் பெரியசேமூர் மற்றும் வீரப்பன்சத்திரம் பகுதியில் நேற்று வாக்கு சேகரித்தார்.

ஈரோடு

ஈரோடு மேற்கு தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் கே.வி.ராமலிங்கம்,சம்பத் நகர், பெரிய சேமூர், வீரப்பன்சத்திரம், சத்தியமங்கலம் சாலை, டீச்சர்ஸ் காலனி, நசியனுார் சாலை போன்ற பகுதிகளில் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து, இரட்டை இலை சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார்.

அப்பகுதி வாக்காளர்களிடம் வேட்பாளர் கே.வி.ராமலிங்கம் பேசியதாவது:

இப்பகுதியில் விசைத்தறியாளர் கள் அதிகம் உள்ளதால், பஞ்சு, நூல் கழிவுகளை அகற்ற மாநகராட்சி மூலம் சிறப்பு ஏற்பாடு செய்யப்படும். இப்பகுதியில் உள்ள விசைத்தறியாளர்களுக்கு விசைத்தறி சேவை மையம் மூலம், ஊக்கத்தொகையுடன், நவீன தறிகளில் பணி செய்வது, விசைத்தறியின் அடுத்தடுத்த தொழில் சார்ந்த பயிற்சிகள், ஆயத்த ஆடைகள் உற்பத்திக்கான பயிற்சியை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும். இதன் மூலம், நெசவாளர் களின் வாழ்வாதாரம் உயரும். அடுத்த தலைமுறையினர், ஜவுளி தொழிலில் மதிப்பு கூட்டப்பட்ட பிற சுய தொழில்களை செய்ய ஏதுவாகும்.

ஈரோடு அரசு மருத்துவமனை, மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவ மனையாக மாற்ற கட்டிடங்கள் கட்டப்படுகிறது. விரைவில் அங்கு சிறப்பு பிரிவுகள், சிக்கலான அறுவை சிகிச்சை பணிகள் மேற்கொள்ளப்படும். அங்கு நெசவாளர்கள், முதியவர்கள் சிகிச்சை பெற சிறப்பு பிரிவு ஏற்படுத்தி தரப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x