Published : 26 Mar 2021 03:16 AM
Last Updated : 26 Mar 2021 03:16 AM
திமுக கூட்டணியை வெற்றி பெற வைக்க மக்கள் தயாராகி விட்டார்கள், என திராவிடர்கழகத் தலைவர் கி.வீரமணி பேசினார்.
ஈரோட்டில் திமுக – காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து நடந்த பொதுக்கூட்டத்தில், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி பேசியதாவது:
கடந்த 10 ஆண்டு அதிமுக ஆட்சி, 7 ஆண்டு மத்திய பாஜக ஆட்சியில் மிகப்பெரிய துயரங்களை மக்கள் அனுபவித்துக் கொண்டு இருக்கிறார்கள்.
தாகத்தில் இருப்பவர் களுக்கு தண்ணீர் பந்தல் கிடைத்தது போல், திமுக தலைமையிலான கூட்டணி விளங்குகிறது. இந்த கூட்டணியை வெற்றி பெற வைக்க மக்கள் தயாராகி விட்டார்கள்.
தமிழகத்தில் திமுக தலைமையில் ஒரு அணி, அதிமுக-பாஜக அணி என இரு அணிகள் தான் போட்டியிடுகின்றன. மீதம் உள்ளவர்களுக்கு முதலாளி ஒருவர் தான். அந்த அணிகளைப் புரிந்து கொண்டு, நாம் பொருட்படுத்த வேண்டியதில்லை.
கரோனா கிருமியை விட ஆபத்தானவர்கள் வடக்கில் இருந்து வரும் பாஜக, ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர்.
இந்த கிருமிகள் அதிமுக விற்குள் புகுந்து விட்டன. 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் அதற்கு ஸ்டாலின் தலைமையிலான திமுக கூட்டணி முதல் தடுப்பூசி போட்டது. தற்போது இந்த தேர்தலில் இரண்டாவது தடுப்பூசி போடப்படவுள்ளது.
தேர்தல் வெற்றிக்குப் பிறகு, ஸ்டாலின் தமிழகத்தை மட்டும் மீட்டு எடுக்கப்போவதில்லை. அடகு வைக்கப்பட்ட அதிமுகவையும் அவர் மீட்டு எடுப்பார்.
தமிழகத்தில் ஸ்டாலின் அலை வீசுகிறது. கருணாநிதி காலத்தில் 186 தொகுதிகளில் திமுக வென்றது. அந்த சாதனை இந்த தேர்தலில் முறியடிக்கப்படவுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ஈவிகேஎஸ் இளங்கோவன், திருப்பூர் எம்.பி. சுப்பராயன், ஈரோடுகிழக்குத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் திருமகன் ஈவெரா உள் ளிட்டோர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT