Published : 25 Mar 2021 03:15 AM
Last Updated : 25 Mar 2021 03:15 AM
தமிழகத்தில் தீர்க்கப்படாத பிரச் சினைகள் ஏராளமாக இருக்கும் நிலையில், இலவசமாக வாஷிங் மெஷின் தருவதால் என்ன பயன்? என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.
கடலூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, அவர் கூறியதாவது:
2019 மக்களவைத் தேர்தலில் பெற்ற வெற்றியை விட, மகத்தான வெற்றியை இம்முறை திமுக பதிவு செய்யும். பாஜக - அதிமுக ஒரு கூட்டணி போன்று தோற்றமளித்தாலும் அவர்கள் கூட்டணியாக செயல்படவில்லை. பிரச்சார கூட்டங்களில் பாஜகவின் கொடி, மோடியின் படத்தை அதிமுகவினர் பயன்படுத்தாமல் தவிர்க்கின்றனர். மோடியைக் காட்டினால் ஓட்டு கிடைக்காது என்பதை அதிமுகவின் தொண்டன் தெரிந்து வைத்திருக்கிறான்.
பாஜகவின் தேர்தல் அறிக்கையில் மதமாற்றத் தடைச் சட்டம், கோயில்களில் ஆடு, கோழி பலியிடுதலுக்கு தடை குறித்து கூறப்பட்டிருக்கிறது. அதிமுக, முன்பே இதை அறிவித்து தேர்தலில் தோல்வியடைந்துள்ளது. இதனை ஏன் பாஜக மீண்டும் கொண்டு வருகிறது என்பது குறித்து அதிமுக எந்த விளக்கமும் அளிக்கவில்லை. இந்த தேர்தல் அறிக்கையை அவர்கள் ஏற்றுக் கொண்டதாகவும் கூறவில்லை.
பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது. இதனால், மோடி அரசு மீது மக்களுக்கு கடும் கோபம் உள்ளது. அதே போல் அதிமுக மீதும் மக்கள் கோபத்தில் உள்ளனர்.
`முத்தியால்பேட்டை வேட்பாளர் ஒருபோதும் விலை போக மாட்டார்’
புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முத்தியால்பேட்டை தொகுதி வேட்பாளர் சரவணனை ஆதரித்து நேற்று மாலை கே. பாலகிருஷ்ணன் திறந்த வாகனத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர்,
“புதுவை மாநிலத்தின் ஏதிர்காலத்தை தீர்மானிக்கும் முக்கியமான தேர்தல் இது. புதுவை மாநிலத்தில் தேர்தலுக்குப் பிறகு ஆட்சி அமைப்பது யார், அந்த எம்எல்ஏ எந்த பக்கம் சாய்வார் என்பது தெரியாது. காற்றடிக்கும் திசையில் எம்எல்ஏக்கள் சாய்ந்து போகும் சூழல் உள்ளது. சிபிஎம் வேட்பாளர் வென்றால், சுனாமியே வந்தாலும் கட்சி மாறாமல் கம்யூனிஸ்ட் கட்சியிலேயே நீடித்து செயல்படுவார். எங்கும் விலை போக மாட்டார்” என்றார். பிரச்சாரத்தின் போது கட்சியின் மத்தியகுழு உறுப்பினர் சுதா, பிரதேச செயலாளர் ராஜாங்கம், மூத்த தலைவர் முருகன் மற்றும் செயற்குழு, பிரதேச குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கைகளால் மலத்தை அள்ளும்பிரச்சினையும், சாக்கடைக் குழிக்குள் மனிதனை இறக்குவதையும் உச்சநீதிமன்றம் தடை செய்த பின்னரும் இன்னமும் அது தொடர்கிறது. 3 சென்ட் பட்டா நிலம் கூட இல்லாமல் மக்கள் உள்ளனர். ஆயிரக்கணக்கான கிராமங்களில் குடிக்கத் தண்ணீர் இல்லை. அடிப்படை மருத்துவ சுகாதார வசதிகளில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இது போன்ற ஏராளமான பிரச்சினைகள் தமிழகத்தில் உள்ளன.
இதையெல்லாம் தீர்க்க முற்படாமல் அதிமுக ஏன் வீட்டிற்கு வீடு வாஷிங்மெஷின் தருவதாக அறிவித்துள்ளது? வாஷிங் மெஷினை வைத்துக்கொண்டு என்ன செய்ய முடியும்?
தேர்தல் ஆணையம் நடுநிலை யோடு செயல்படவில்லை. எதிர்க்கட்சித் தலைவர்களை மிரட்டும் வகையில் அவர்களைச் சோதனையிடுகின்றனர். எங்காவது ஆளும்கட்சியினரை சோதனையிட் டுள்ளனரா? மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் நம்பகத்தன்மை குறித்து மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், யாருக்கு வாக்களித்தோம் என்பதை தெரிவிக்கும் விவிபேட்டில் வரும் காகிதத்தையும், ஓட்டு எண்ணிக்கையின் போது கணக்கிட்டுக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம். அப்போது தான் வாக்குப்பதிவு இயந்திரத்தின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த முடியும் என்று தெரிவித்தார். மாவட்ட செயலாளர் ஆறுமுகம், மாநிலக்குழு உறுப்பினர் மாதவன், நகர செயலாளர் ஆர்.அமர்நாத் உள்ளட்ட பலர் உடனிருந்தனர்.
ஆயிரக்கணக்கான கிராமங்களில் குடிக்கத் தண்ணீர் இல்லை. இது போன்ற ஏராளமான பிரச்சினைகள் தமிழகத்தில் உள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT