Published : 24 Mar 2021 03:14 AM
Last Updated : 24 Mar 2021 03:14 AM
விழுப்புரம் சட்டமன்றத்தொகுதி திமுக வேட்பாளர் லட்சுமணன் கோலியனூர் ஒன்றியத்திற்குட்பட்ட கல்லப்பட்டு, இளங்காடு, நரையூர், சாலையம்பாளையம், ராமையன்பாளையம், செங்காடு உள்ளிட்ட கிராமங்களில் பிரச்சாரம் செய்தார்.
அப்போது அவர் வாக்காளர்களிடம், “மாநிலங்களவை உறுப்பினராக இருந்த போது இந்தத்தொகுதி மக்களின் வளர்ச்சிக்கு என்னால் முடிந்த திட்டங்களையும், சேவைகளையும் செய்துள்ளேன். நான்வெளியூர்காரன் அல்ல. உங்கள்தொகுதியைச்சார்ந்த உள்ளூர்காரன். கூப்பிட்ட குரலுக்கு ஓடோடிவந்து உங்களின் குறைகளை நிறைவேற்றுவேன். திமுக தேர்தல் அறிகையில் தெரிவிக்கப்பட்ட மகளிர் உதவித் தொகை போன்ற அனைத்து திட்டங்களையும் வீடுதேடி கொண்டு வருவேன்” என்று வாக்குறுதி அளித்தார். மாவட்டதுணை செயலாளரான முன்னாள்எம்எல்ஏ புஷ்பராஜ், ஒன்றிய செயலாளர் தெய்வ சிகாமணி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தினகரன் உள்ளிட்ட பலர் உடன் சென்று வாக்கு சேகரித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT