Published : 24 Mar 2021 03:16 AM
Last Updated : 24 Mar 2021 03:16 AM
திருப்பத்தூர் மாவட்டத்தில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் தபால் மூலம் வாக் களிக்க 1,808 பேர் விண்ணப்பம் அளித்துள்ளதாக ஆட்சியர் சிவன் அருள் தெரிவித்துள்ளார்.
இது குறித்து திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவன் அருள்செய்தியாளர்களிடம் கூறும் போது, ‘‘இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்படி தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் அவர்கள் இருப்பிடங்களில் இருந்தபடி தங்களது வாக்குகளை தபால் மூலம் பதிவு செய்யும் வசதியை நடைமுறைப்படுத்தியுள்ளது.
இதற்கான விண்ணப்பங்களை (12-டி) மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் சமர்ப்பிக்க வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியிருந்தது. திருப்பத்தூர் மாவட்டத்தில் 4 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தபால் மூலம் வாக்களிக்க விருப்ப முள்ள மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு வந்தன.
அதன்படி, திருப்பத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் 339 மூத்த குடிமக்கள், 104 மாற்றுத்திறனாளிகள் என 443 பேரும், ஜோலார்பேட்டை தொகுதியில் 298 மூத்த குடிமக்கள் 100 மாற்றுத்திறனாளிகள் என 398 பேரும், வாணியம்பாடி தொகுதியில் 410 மூத்த குடிமக்கள், 140 மாற்றுத்திறனாளிகள் என மொத்தம் 550 பேரும், ஆம்பூர் தொகுதியில் 301 மூத்த குடிமக்கள், 116 மாற்றுத்திறனாளிகள் என மொத்தம் 417 பேர் என 4 தொகுதிகளில் 1,808 பேர் தபால் மூலம் வாக்களிக்க விருப்பம் தெரிவித்து விண்ணப்பங்களை வழங்கி யுள்ளனர்.
தபால் வாக்களிக்க விண்ணப் பித்தவர்கள் தங்களது இருப்பிடங் களில் இருந்தபடி தங்களது வாக்கை பதிவு செய்ய மண்டல அளவில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதிக்கும் தபால் வாக்குகளை கொண்டு சென்று சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர், கிராம ஊராட்சி செயலாளர் அப்பகுதியில் உள்ள அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்காளரிடம் தபால் வாக்குப்படிவத்தில் அவர் களுடைய வாக்கை பதிவு செய்து தேர்தல் அலுவலர்கள் கொண்டு செல்லும் பெட்டியில் அளிக்கலாம்.
இதற்காக, 4 தொகுதிகளுக்கும் பிரத்யேக வாகனவசதி, வாகனங்கள் இடையூறின்றி சென்று வர வழித்தடம், காவல் பாதுகாப்பு, தேர்தல் பணியாளர்கள் உள்ளிட்ட வசதிகளை அந்தந்த தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மேற்கொள்வார்கள். தபால் வாக்குப்பதிவு நாள் எப்போது என்பது குறித்து ஓரிரு நாளில் அறிவிப்பு வெளியாகும். எனவே, அதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மேற்கொள்ள வார்கள்’’ எனக்கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT