Published : 23 Mar 2021 03:14 AM
Last Updated : 23 Mar 2021 03:14 AM

விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு - 20 தொகுதிகளில் 304 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர் :

விழுப்புரம்/கடலூர்

கள்ளக்குறிச்சி,கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் தொகுதி வாரியாக களத்தில் உள்ள இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளில் 102 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளில் 136 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளில் 66 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கள்ளக்குறிச்சி(தனி), சங்கராபுரம், ரிஷிவந்தியம், உளுந்தூர்பேட்டை உள்ளிட்ட 4 தொகுதிகளில் 121 பேர் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இதில் 70 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டன. இதையடுத்து நேற்று சில மனுக்கள் வாபஸ் பெறப்பட்டதையடுத்து களத்தில் உள்ள வேட்பாளர்கள் விவரம் நேற்று வெளியிடப்பட்டது.

தொகுதி வாரியாக வேட்பாளர்கள் விவரம்:

கள்ளக்குறிச்சி (தனி)

எம்.செந்தில் குமார்-அதிமுக,கே.ஐ.மணிரத்னம்-காங்கிரஸ் (திமுக கூட்டணி), திராவிட முத்தமிழ் செல்வி-நாம் தமிழர் கட்சி, ந.விஜயக்குமார்-தேமுதிக(அமமுக கூட்டணி), அ.பழனிச்சாமி-பகுஜன் சமாஜ் கட்சி, மு.அய்யாசாமி-இந்தியன் ஜன நாயகக் கட்சி, ஓவியர் ஆனந்த்.லோக் ஜனசக்தி பார்ட்டி,மு.தினேஷ்-மை இந்தியா பார்ட்டி, க.குப்புசாமி-அண்ணா எம்ஜிஆர் திராவிட மக்கள் கழகம்,சுயேச்சை வேட்பாளர்கள் கு.இளைய பெருமாள், மு.குருசாமி, செ.சிவக்குமார்,பெ.சுப்ரமணியன், மு.சூர்யபிரகாஷ், ம.செல்வராஜ், தேவிமங்கையர்கரசி, சி.பிரபு.

சங்கராபுரம்

தா.உதயசூரியன்-திமுக, ஜி.ராஜா-பாமக (அதிமுக கூட்டணி),ரஜியாமா-நாம் தமிழர் கட்சி, சக்திவேல்- பகுஜன் சமாஜ் கட்சி, அ.அருண்கென்னடி-அனைத்து இந்திய பாட்டாளி முன்னேற்றக் கட்சி, ஓவியர் ஆனந்த் -லோக் ஜனசக்தி பார்ட்டி, எம்.முஜிபுர் ரஹிமான்-அனைத்திந்திய மஜிலி-இ இத்ததூல் முஸ்லிமீன், சுயேச்சை வேட்பாளர்கள் கே.ஜெயப்பிரகாஷ், கே.தனம், இ.கோபிநாத், எ.குபேந்திரன், எ.உதயக்குமார், பி.அருள், எஸ்.விமலாமேரி, இ.ராஜ்குமார்,ஜி.ரமேஷ்,எஸ்.மாரி, எஸ்.பாபு கணேஷ், எம்.பி.மன்னன்.

உளுந்தூர்பேட்டை

ஏ.ஜே.மணிக்கண்ணன்-திமுக,.ரா.குமரகுரு-அதிமுக, கே.ஜி.பி.ராஜாமணி-அமமுக, எஸ்.சின்னையன்-மக்கள் நீதி மய்யம், எல்.புஷ்பமேரி-நாம் தமிழர்கட்சி, ப.தனபால்-லோக் ஜனசக்தி, அ.குமார்-இந்தியக் குடியரசுக்கட்சி, செல்வ சத்தியமூர்த்தி-பகுஜன் சமாஜ் கட்சி, மா.வெங்கடேசன்-சிபிஐ(எம்.எல்.), சுயேச்சை வேட்பாளர்கள் கே.ராஜா மணி, மொ.கதிர்வேல்,எம்.தீபா, ம.மணிக் கண்ணன், ஆர்.மணி, ராஜா ஸ்டாலின்.

ரிஷிவந்தியம்

வசந்தம் கார்த்திக்கேயன்-திமுக, எ.சந்தோஷ்-அதிமுக, கே.சண்முகசுந்தரம்-மக்கள் நீதி மய்யம், சி.பிரபு-அமமுக, சுரேஷ் மணிவண்ணன்-நாம் தமிழர்கட்சி, அ.நாராயணன்-அண்ணா எம்ஜிஆர் திராவிட மக்கள் கழகம், எஸ்.வீரன்-பகுஜன் சமாஜ் கட்சி, கே.ராதாகிருஷ்ணன்-மக்கள் முன்னேற்றப் பேரவை, ஜெ.வெங்கட்ராமன்-நாடாளும் மக்கள் கட்சி, மு.தமிழ்வாணன்-மை இந்தியா கட்சி, சுயேச்சை வேட்பாளர்கள் கு.கார்த்திக், க.குரு, வெ.சந்திரசேகரன், கே.முரு கன், மு.சந்தோஷ்.

விழுப்புரம் மாவட்டம்

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விழுப்புரம், விக்கிர வாண்டி, மயிலம்,வானூர், திண்டி வனம்,செஞ்சி, திருக்கோவிலூர் ஆகிய 7 தொகுதிகளில் 102 மனுக்கள் ஏற்கப்பட்டது. நேற்று இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி தொகுதி வாரியாக களத்தில் உள்ள வேட்பாளர்கள் விவரம்:

வானூர் (தனி)

ப.ம.கணபதி- தேமுதிக (அமமுக கூட்டணி), மு.சக்கரபாணி- அதிமுக, மு.விநாயகமூர்த்தி-பகுஜன் சமாஜ் கட்சி, மா.சந்தோஷ்குமார்- மக்கள் நீதி மய்யம், மு.லட்சுமி - நாம் தமிழர் கட்சி, வன்னிஅரசு - விடுதலை சிறுத்தைகள் கட்சி (திமுக கூட்டணி), சுயேச்சை வேட்பாளர் சு. சக்திவேல்.

மயிலம்

ஆ. சுந்தரேசன்- தேமுதிக (அமமுக கூட்டணி), மு.துரை- பகுஜன் சமாஜ் கட்சி, இரா. மாசிலாமணி-திமுக,லோ. உமா மகேஸ்வரி-நாம் தமிழர் கட்சி, ச. சிவகுமார்-பாமக (அதிமுககூட்டணி), ஆ. மணவாளன்-அண்ணா எம்ஜிஆர் திராவிடக் கழகம்,சுயேச்சை வேட்பாளர்கள் கோ. கண்ணன், சே. சத்யராஜ், இரா.சந்திரபிரகாஷ், ஐ.எம்.சேகர் நாயக்கர், வி. மாசிலாமணி, வெ.மாசிலாமணி, மு.ராஜசேகர், த.தர்.

விக்கிரவாண்டி

சி.ஆறுமுகம்- பகுஜன் சமாஜ் கட்சி, நா. புகழேந்தி- திமுக, ர.முத்தமிழ் செல்வன்- அதிமுக, சு. இளங்கோவன்- அகில பாரத இந்து மகாசபா, ர. அய்யனார்- அமமுக, இரா.செந்தில்- இந்திய ஜனநாயக கட்சி, ப.ராஜீவ்காந்தி- நாடாளும் மக்கள் கட்சி, ஷீபா ஆஸ்மி- நாம் தமிழர் கட்சி

சுயேச்சை வேட்பாளர்கள் கு.அய்யப்பன், அ.அய்யனார், ஆ. கண்ணதாசன்,ஜெ.காயத்ரி, ர.சதீஷ், ப.ரகுபதி.

திண்டிவனம் (தனி)

பொ.அர்ஜூனன்-அதிமுக, அ.கோவிந்தசாமி-பகுஜன் சமாஜ் கட்சி, க.சந்திரலேகா- தேமுதிக (அமமுக கூட்டணி),பெ.சீத்தாபதி- திமுக, கு.இளவரசன் அண்ணா திராவிட கழகம், ம.சேட்டு- தேசிய சிறுபான்மையினர் மக்கள் இயக்கம், பா.பேச்சிமுத்து- நாம் தமிழர் கட்சி, பொய்யாது (எ) அன்பின் பொய்யாமொழி-மக்கள் நீதி மய்யம், அ.மோகன்- மக்கள் சக்தி கட்சி, சு.அ.விஸ்வநாதன்- அனைத்திந்திய பாட்டாளி முன்னேற்ற கட்சி,சுயேச்சை வேட்பாளர்கள் ஜெ.அருள்மாறன், மா.கோகுல கிருஷ்ணன், அ. தம்பிராஜ், செ. விநோத்,சொ.வெற்றி வேந்தன்.

விழுப்புரம்

இரா. லட்சுமணன்- திமுக, சி.வி. சண்முகம்- அதிமுக, நா. சிவபாலன் - பகுஜன் சமாஜ் கட்சி, ஜெ. செல்வம்- நாம் தமிழர்கட்சி, க. தாஸ்- மக்கள் நீதிமய்யம், த. துரைசாமி- மக்கள் முன்னேற்ற பேரவை, நா. தேவநாதன்- வீரத்தியாகி விஸ்வ நாததாஸ் தொழிலாளர்கள் கட்சி,ர. பாலசுந்தரம்- அமமுக,

அ.முகமது இப்ராஹீம்- அண்ணா திராவிடர் கழகம், ஏ. எஸ். விக்டர்- தேசிய சிறுபான்மையினர் மக்கள் இயக்கம்,சுயேச்சை வேட்பாளர்கள் கோ.இனியதயாளன்,கோ.ஐய்யனார்,வி.குப்பன்,ரா.குமார், பு.கேசவன், அ. சண்முகம், கோ.சண்முகம்,வ.சண்முகம், ரா.சுப்பிரமணியன்,வ. தட்சணா மூர்த்தி,தே. நரேந்திரன், க.பாலு, மா.பிரபாகரன்,க.ராமன், ரா.ஜெய் ஆதி.

திருக்கோவிலூர்

வி.ஏ.டி.கலிவரதன்- பாஜக (அதிமுக கூட்டணி), சிவ. பஞ்சவர்ணம்- பகுஜன் சமாஜ் கட்சி, க.பொன்முடி-திமுக, எல்.வெங்கடேசன்- தேமுதிக(அமமுக கூட்டணி), எஸ்.சங்கர்- வீரத்தியாகி விஸ்வநாததாஸ் தொழிலாளர்கள் கட்சி, எம்.செந்தில்குமார்-இந்திய ஜனநாயக கட்சி, சி.முருகன்- நாம் தமிழர் கட்சி, வி.ஆர்.ரஜினி- நாடாளும் மக்கள் கட்சி,

சுயேச்சை வேட்பாளர்கள் கே.கதிரவன்,அ.பிரகாஷ்,எம்.மகேஷ்,எஸ்.மதிவாணன்,ம.விக்னேஷ்,கோ.ஜெயவிந்தன்.

செஞ்சி

கே. எஸ். மஸ்தான் - திமுக, இரா. ஜெகந்நாதம்- பகுஜன் சமாஜ் கட்சி, அ.நா. ஏழுமலை- அண்ணா திராவிடர் கழகம், அ.கௌதம்சாகர்- அமமுக,அபு சுகுமார்- நாம் தமிழர் கட்சி, பெ. ராசேந்திரன்- பாமக (அதிமுக கூட்டணி), பூ. பதி- மக்கள் நீதி மய்யம், சுயேச்சை வேட்பாளர்கள் த.கிருபாகரன், சு.கோபி, செ.மாரியப்பன், பூ.வர்த்தமானன்.

கடலூர் மாவட்டம்

கடலூர் மாவட்டத்தில் உள்ளகடலூர், சிதம்பரம், குறிஞ்சிப்பாடி,புவனகிரி, பண்ருட்டி, விருத்தாசலம், சிதம்பரம், திட்டக் குடி ,காட்டுமன்னார்கோவில் ஆகிய 9 தொகுதிகளிலும் 263பேர் மனுத் தாக்கல் செய்திருந்தனர். இந்நிலையில் 155 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டது. இதையெடுத்து நேற்று 19 பேர் வேட்பு மனுக்களை வாபஸ் பெற்ற பின்னர் களத்தில் 136 வேட்பாளர்கள் உள்ளனர்.

காட்டுமன்னார்கோவில் (தனி)

தங்கஉதயகுமார்- பகுஜன் சமாஜ் கட்சி,என். முருகுமாறன்- அதிமுக, எம்.ஜி.கல்யாணசுந்தரம்- அகில இந்திய ஜனநாயக மக்கள் கழகம், சிந்தனைச்செல்வன்- விடுதலைச்சிறுத்தைகள் கட்சி(திமுக கூட்டணி), தங்கவிக்ரம்- மக்கள்நீதி மய்யம், ம.திருநாவுக்கரசு- அண்ணா புரட்சி தலைவர் அம்மாதிராவிட முன்னேற்ற கழகம், எஸ். நாராயணமூர்த்தி- அமமுக,ப.நிவேதா- நாம் தமிழர் கட்சி, சுயேச்சை வேட்பாளர்கள் எம்ஏடி- அர்ச்சு னன், அ.ஆனந்தன்,பி.எம்.குமார்,எஸ்.தமிழ்ச்செல் வன்,மதியழகன்.

விருத்தாசலம்

அய்யாசாமி- பகுஜன்சமாஜ், பிரேமலதா விஜயகாந்த்- தேமுதிக(அமமுக கூட்டணி), ரா.ராதாகிருண்ணன்- இந்திய தேசிய காங்கிரஸ், ந.அமுதா- நாம் தமிழர் கட்சி, பா.அரசி- ராஷ்ட்ரிய ஜனதா தளம், ஜெ.கார்த்திகேயன்- பாமக,ரா.கேசவபெருமாள்- தமிழ்நாடு இளைஞர்கட்சி, சத்தியநாதன்- அனைத்து மக்கள் புரட்சி கட்சி, சிவசங்கர்- நியூ ஜென்ரேஷன் பீப்பில்ஸ் பார்ட்டி, ரா.பார்த்தசாரதி- இந்திய ஜனநாயக கட்சி, ஜி.பிச்சமுத்து- தேசிய சிறுபான்மையினர் மக்கள் இயக்கம், சுயேச்சை வேட்பாளர்கள் க. அருள்ஜோதி,மு. அன்வர்பாஷா, சா.சதசிவம், ம.சத்தியசீலன், ரெ.சரவணன், கே.பி.செந்தில்முருகன், சி.தனசேகர், பெருமாள், ச.மகாவீரசந்த், அ.மணிகண்டன், சு.முருகானந்தம், சா.ராதாகிருஷ்ணன், விருதை என். ராதிகா.

கடலூர்

இரா.வள்ளல்குமார்- பகுஜன்சமாஜ் கட்சி, கோ. ஐயப்பன்- திராவிட முன்னேற்ற கழகம், எம்சி.சம்பத்-அதிமுக, அ.ஞானபண்டிதன்-தேமுதிக, கு.ஆனந்தராஜ்- மக்கள் நீதி மய்யம், சி.புஷ்பராஜ்- தமிழ்நாடு இளைஞர் கட்சி, அ.முகமது உஸ்மான்- அண்ணா புரட்சித்தலைவர் அம்மா திராவிட முன்னேற்ற கழகம், எஸ்.வி.ராஜராஜன்-தேசிய மக்கள் கட்சி,ஜலதீபன்.வா,- நாம் தமிழர் கட்சி.

சுயேச்சை வேட்பாளர்கள் கோ.கிருஷ்ணன், சே.சம்பத், கு.தங்கராசு,வி.தட்சிணாமூர்த்தி,சு.தீனதயாளன்,ஜே.ஜேக்கப்.

குறிஞ்சிப்பாடி

செல்வி இராமஜெயம்-அதிமுக, எம்ஆர்கே.பன்னீர்செல்வம்-திமுக, த.வேலாயுதம்-பகுஜன்சமாஜ் கட்சி, சந்திரமௌலி-மதசார்பற்ற ஜனதாதளம், சீ.சுமதி-நாம் தமிழர் கட்சி, இரா. முத்துகிருஷ்ணன்-அண்ணா திராவிடர் கழகம், அ.வசந்தகுமார்-அமமுக, சுயேச்சை வேட்பாளர்கள் இரா.சரத்குமார், பிரிஜிதாரோஸ்லின், எல்.மதியழகன், ந. முத்தழகன், இரா.ராஜேஷ்.

சிதம்பரம்

தே.சந்திரபிரபு- பகுஜன்சமாஜ் கட்சி, கே.ஏ.பாண்டியன்-அதிமுக, எஸ். அப்துல் ரஹ்மான்- இந்திய யூனியன் முஸ்லீம் லீக்(திமுக கூட்டணி), -க.உதயசெல்வன்- அனைத்து மக்கள் புரட்சி கட்சி,ஞா.தேவசகாயம்- மக்கள் நீதி மய்யம், நடராஜன் கிருஷ்ணமூர்த்தி- நாம் தமிழர் கட்சி, ம.நந்தினிதேவி-அமமுக, மு.ரகுநாதன்- இளந்தமிழர் முன்னணி கழகம்.

சுயேச்சை வேட்பாளர்கள் பி.நாராயணமூர்த்தி, ச.பால முருகன், செ.வினோபா.

திட்டக்குடி (தனி)

உமாநாத்.ஆர்-தேமுதிக (அமமுக கூட்டணி), கணேசன். சி.வெ-திமுக, பெரியசாமி.து-பாஜக (அதிமுக கூட்டணி), ரவிச்சந்திரன். பொ- பகுஜன் சமாஜ் கட்சி, அருள்தாஸ்.ஏ- தேசிய மக்கள் சக்தி கட்சி, காமாட்சி.ந-நாம் தமிழர் கட்சி,பிரபாகரன்.ரா- மக்கள் நீதி மய்யம், சுயேச்சை வேட்பாளர்கள் அய்யாசாமி.சு, கருப்பன்.மா, காமராஜ்.க, கொளஞ்சிநாதன். வெ, சீனுவாசன். சி, சுமதி. சி, நடராஜன். ம, பழனியம்மாள். பெ.

பண்ருட்டி

ராஜேந்திரன். ஆர்-அதிமுக, சிவக்கொழுந்து. பி- தேமுதிக, வேல்முருகன்.டி- திமுக, சுபாஷிணி.ஆர்-நாம் தமிழர் கட்சி, ஜெயலானி- மக்கள் நீதி மய்யம், அருள்குமார்.ஆர், சுயச்சை வேட்பாளர்கள் காமதேவன். எஸ், கிருஷ்ணராஜ்.எஸ், குமார்.டி, கோவிந்தசாமி.எஸ், சுமதி.வி, நாகமணி.எம், பிரகாஷ்.ஆர், வேல்முருகன்.கே, வேல்முருகன்.ஆர்.

புவனகிரி

ஏ.அருண்மொழின்தேவன்-அதிமுக,ஆர். ஏழில்வேந்தன்- பகுஜன்சமாஜ் கட்சி, துரை.கே. சரவணன்- திமுக, ஆர். ரத்னவேல்- நாம் தமிழர் கட்சி, பெயர்- கே.எஸ்.கே.பாலமுருகன்-அமமுக,ஆ.ரேவதி- இந்திய ஜனநாயக கட்சி, சுயேச்சை வேட்பாளர்கள் எஸ்- ஆனந்தன், டி.சிவக்குமாரி, ஜி.சி. பாலமுருகன், எம்.பழனிவேல், ஆர். ரஞ்சித், கே.ஜெயக்குமார், ஜே.சரவணன்,பி.எழில் வேந்தன்.

நெய்வேலி

கனகராஜி.ச- பகுஜன்சமாஜ் கட்சி, சபா.ராசேந்திரன்- திமுக, இளங்கோவன்.ர-இந்திய ஜனநாயக கட்சி, பக்தரட்சகன்.ரா-அமமுக,ரமேஷ்.கி- நாம் தமிழர் கட்சி, ஜெகன்.கோ-பாமக(அதிமுக கூட்டணி),சுயேச்சை வேட்பாளர்கள் தனசேகரன்.ச, திலிபன்.உ, துர்கா.கு, பூபாலன்.ஏ, ராஜேந்திரன்.பா, வடுகநாதன்.இரா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x